பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்

7


நாட்டிலே வாழ்ந்திருக்கிறார். அவர் எழுதிய பாடல்களையும் நாம் படித்து வருகின்றோம்.

இவற்றை எல்லாம் நாம் ஏன் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறோம் என்றால். பாம்பைக் கண்டால் பயப்படாதீர்கள். அந்தப் பாம்புகள் கடித்தாலும் அவற்றின் விஷத்தை அகற்றிக் குணப்படுத்த நமது மருத்துவ நிபுணர்கள் மருந்துகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதனால் பாம்புக்கடிகளால் ஏற்படும் மரணத்தையும் வென்றுவிடலாம் என்பதற்காகவே, எழுதுகின்றோம்

பொதுவாகப் பாம்புகள் நகர்ப்புறத்தில் அதிகமாக வாழ்வது இல்லை. எங்கோ ஒன்றிரண்டுகள் இருக்கலாம். எனவே, நகர்களில் வசிக்கும் மக்களுக்குப் பாம்புகளால் கஷ்டங்களோ, பயமோ, தொல்லைகளோ ஏற்பட வழியில்லை.

ஆனால், பாம்புகள் கிராமங்களிலே உள்ள மரம் செடி கொடிகள் உள்ள இடங்களிலே, குப்பை மேடுகளிலே, கூரை வீடுகளிலேதான் அதிகமாக வாழ்கின்றன. அதனால் பாம்புக் கடிகளின் மரண பயங்கள், உயிர் ஆபத்துக்கள் கிராமங்களிலே வாழுகின்ற மக்களுக்குத்தான் உண்டு.

அதிலும் குறிப்பாகச் சொல்வதானால், மலைவாழ் பகுதி மக்களுக்கும், பழங்குடி ஜனங்களுக்கும்தான் பாம்புகளால் அதிக ஆபத்துக்கள் ஏற்பட வழிகள் உள்ளன.

கிராமப்புறங்களில் பாம்புகள் உலாவுவது ஒரு சகஜமான போக்கு ஆகிவிட்டது. காரணம் மக்கள் நடமாட்டங்களும், வாகனப் போக்குவரத்துக்கள் குறைவாகவும், மரம்செடி கொடிகள் அதிகமாக இருப்பதாலும் தான் பாம்புகள் தாராளமாகப் புற்றுக்களை உருவாக்கி வாழும் நிலை உள்ளன.