உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

வாங்குவோர் மலிவாகவும் லாபகரமாகவும், அரிய துரல்கள் பலவற்றை வாங்குவது சாத்தியமாயிற்று.

வை. கோ. வெளியிட்ட நூல்கள் உண்மையி லேயே உயரிய மலிவு வெளியீடு களாகும். அவற்றை விடக் கொள்ளே மலிவு என்று சொல்லும்படியான் நல்ல புத்தகங்களும் கிடைத்தன. இந்த ரகத்திலே * சித்தர்களின் பாடல் தொகுப்பு:ம் (ஞானக் கோவை) சேரும். . . . - ----

வாழ்க்கையை வெறுத்து, உடலின்பங்களையும் சுகபோகங்களையும் துறந்து, உலகின் நிலையாமையை பும் பயனற்ற தன்மைகளேயும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகப் பாட்டுப் பாடிக்கொண்டு, கிடைத்தால் உண்பது - கிடைக்காவிட்டால் கவலையற்றுத் திரிவது, கண்ட கண்ட இடங்களில் படுத்துறங்குவது என்று. திரிந்தவர்கள் சித்தர்கள்.

சித்தர் பாடல்களில் பட்டிணத்தார், சிவவாக்கியர் போன்றவர்களது பாட்டுக்கள் பகுத்தறிவு வாதத்தின் பாற்படுவதாகும். சிவவாக்கியர் சரியான அறிவியல் வாதி, பாம்பாட்டிச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகணிச் சித்தர் போன்ற சிலரது பாடல்கள் எளிடிையும் இனிமையும் இசை நயமும் கலந்து தொனிப்பன. ஆறு, ஏழு சித்தர்களுக்கு அப்பால்பட்ட சித்தர்களின் ஒலங்களும் ஒப்பாரிகளும் படிப்பதற்கு இனிய தமிழில் இருந்தபோதிலும், புரியாத புலப்பங்களாகவே உள்ளன - பெரும்பாலும் சித்த பரிபாஷை அளவுக்கு அதிகமாகக் கலந்து கிடக்கிறது அவற்றிலே,

விள்ங்கித் மொழி க' ம்