பக்கம்:முந்நீர் விழா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முகவுரை

ஒரு காட்டின் பெருமையை அந்த காட்டில் வாழ்ந்த அரசர்களின் வரலாறுகள் மட்டும் தெரிவிக்கும் என்பது இல்லை குடிமக்களில்பலர் பெருஞ் செல்வர்களாக இருந்து அரசர் செய்யாத நற் செயல்களைச் செய்திருக்கிருர்கள், முடியுடை மன்னர்களல்லாமல் அங்கங்கே சிறிய பகுதிகளுக்குத் தலைவர்களாக இருந்த குறுகில மன்னர்களும் வேளிர்களும் பல அரிய வண்மைச் செயல்களையும் வீரச் செயல்களையும் ஆற்றியிருக்கிறர்கள். அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகள் பல உண்டு.

இலக்கியங்களால் தெரிய வரும் அத்தகைய நிகழ்ச்சிகள் காட்டு வரலாற்றின் பகுதிகள் என்றே சொல்வதற்குரியன. வரையறையாக வரலாற்றை எழுதி வைக்கும் வழக்கம் இந்த நாட்டில் இல்லை. ஆயினும் பல பெருமக்களுடைய செயல்களே இலக்கியங்கள் அங்கங்கே புலப்படுத்துகின்றன. புறநானூறு என்னும் சங்க நூலில் உள்ள ஒவ்வொரு பாடலும் இத்தகைய நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே எழுந்தது.

பிற்காலத்தில் ஒவ்வொரு மண்டலத்தின் பெருமையையும் தெரிவிக்கும் நூல்கள் எழுந்தன. என்ன காரணத்தாலோ ஒருவர் நூறு என்ற வரையறை செய்து சதகமாக அத்தகைய நூலைப் பாட மற்ற மண்டலங்களின் சிறப்பைத் தெரிவிக்க வந்தவர்களும் சதகங்களையே பாடிவிட்டார்கள். தொண்டை மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், சோழ மண்டல சதகம், பாண்டி மண்டல சதகம், என்ற பெயர்களுடன் அவை வழங்குகின்றன. அந்தச் சதகங்களில் உள்ள பாடல்கள் அந்த அந்த மண்டலங்களில் வாழ்ந்த பலருடைய வரலாற்றேடு சம்பந்தமுள்ள நிகழ்ச்சிகளைக் சொல்கின்றன. பல புலவர்களையும் புரவலர்களையும் பெண்மணிகளையும் செல்வர்களையும் வள்ளல்களையும் பக்தர்களையும் அந்தச் சதகங்களில் காணலாம். பல அருங்குணங்களின் இருப்பிடமாகிய அப்பெரு மக்கள் வரலாறுகள் எண்ண எண்ண இன்பம் தருவன. பலவகைச் சுவைகளும் அந் நிகழ்ச்சிகளில் உள்ளன.

இவற்றையன்றித் தனிப் பாடல்களில் பொதிந்துள்ள நிகழ்ச்சிகள் பல உண்டு. தமிழ் நாவலர் சரிதையால் தெரிகின்ற புலவர்கள் வரலாறுகள் பல.

இத்தகைய நிகழ்ச்சிகளைத் துருவி ஆராய்ந்து உருவாக்கி எழுதும் கலையை என்னுடைய ஆசிரிப்பிரானாகிய மகாமகோபாத்தி யாய ஐயரவர்களிடம் நான் கற்றுக்கொண்டேன் அதன் பயனாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/5&oldid=1207650" இலிருந்து மீள்விக்கப்பட்டது