பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

கரைப் பட்டினங்களில் கரை இறக்கப்பட்டு, கொங்கு நாட்டு வழியாக சோழ நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. இன்னும், கோழிக்கோடு நகரில் குதிரை வட்டம் என்ற பகுதியும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் குதிரைப்பாளையம் என்ற ஊரும் இருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது. இத்தகைய வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை “குதிரைச் செட்டிகள்” என கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.[1]

அரபுக்குடா நாட்டுக் குதிரைகளின் நடமாட்டமும் வணிகமும், பிற்காலப் பாண்டிய பேரரசு காலத்திலும் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்றன. ஆண்டுதோறும், பதினாயிரம் குதிரைகள் பாண்டிய நாட்டுப் பெருந்துறைகளான காயல்பட்டினம், தேவிபட்டினம், ஆகிய துறைகளில் கரை இறக்கப்பட்டன.[2] அங்கிருந்து, அவை முறையே நெல்லைக்கும் மதுரைக்கும் நடத்தி, கடத்திச் செல்லப்பட்டன. அந்த வழிகளில் ஒன்று இன்னும் முதுகுளத்துார் வட்டத்தில் “குதிரை வழிக்காடு” என்று வழங்கப்படுகிறது. அந்த வழியைத் தொடர்நது திருச்செந்தூர் பரமன்குறிச்சியில், “குதிரை வழிக்குளம்” இருந்து வருவது ஆராயத்தக்கது. இந்தக் குதிரைகளை பாண்டியனுக்காகப் பெற்றுவரச் சென்ற வாதவூரர், திருப்பெருந்துறையில் திருப்பணி செய்து தீட்சை, பெற்று மாணிக்கவாசகரான கதையை திருப் பெருந்துறைப்புராணம், “கோட்டமிலா மாணிக்கவாசகர் முன் குதிரை ராவுத்தனாக” இறைவன் வந்து" நின்றதாகக் குறிப்பிடுகிறது.[3] அந்த திருப்பெருந்துறையில் உள்ள ஆலயத்தின் முகப்பு மண்டபம், குதிரை வீரர் சிற்பங்களுடன் அமைக்கப்பட்டு இருப்பதுடன், “ராவுத்தர் மண்டபம்” என வழங்கப்படுதலும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. மதுரை திருவிளையாடல் புராணத்தில், பரஞ்சோதி முனிவர், குதிரை வணிகராக வந்த கூடல்மாநகர இறைவனை,

“இன்னைறி மன்னர் மன்னர்

இனிமை கர்ந்து இராவுத்தற்கு”


  1. A R. 556/1904
  2. கமால் – டாக்டர் எஸ்.எம் - இராமனாதபுர மாவட்ட வரலாற்று குறிப்புகள். (1984) பக்கம் 71-72
  3. திருவாதவூரர் – திருப்பெருத்துறைப்புராணம்