சுெ.சமுத்திரம் قساث yع / 11 போன்ற விதவிதமான சேலைகளில் வந்த இளம் பெண்கள், நடுத்தரங்கள். கழுத்தில் கிடக்கும் மஞ்சள் சரட்டை ஜாக்கெட்டிற்கு வெளியே காட்டுவது மாதிரியாக சிலர். அது தெரியாததுபோல் ஜாக்கெட்டில் விளிம்புபோல் அவற்றை ஆக்கிக் கொண்டவர் பலர். சில பெண்கள் முரட்டு டயரில் நெய்யப்பட்டது மாதிரியான சேலை கட்டியிருந்தார்கள். அத்தனை பேரும் கூலிப் பெண்கள். இடுப்பிலோ அல்லது தோளிலோ துவண்டு கிடந்த குழந்தைகளைச் சுமந்து வந்தார்கள். அப்படியும் ஒரு குழந்தை ஒருத்தியின் இடுப்பிலிருந்து இன்னொருத்தியின் தலையில் சூட்டிய பூ மொத்தையை பறிக்கப் போனது. அத்தனை பெண்களும், அந்த மசூதி வாசலில் ஒப்புக்குக்கூட நின்று நிதானிக் காமல், சொந்த வீட்டிற்குள் போவதுபோல் போனார்கள். இடுப்பு வழியாய் இறங்கப்போன குழந்தைகளை ஒரு குலுக்குக் குலுக்கி மேலே ஏற்றிக்கொண்டும், தோளில் கிடந்த குழந்தை களின் தலைகளை வருடிக் கொடுத்தும் அந்த மசூதிக்குள் நேற்று எங்கே நின்றார்களோ அங்கே நின்று கொண்டார்கள். திவான் முகமது அந்தப் பெண்களை ஒரு தடவை பார்த்துவிட்டு, மறுதடவை ராமலிங்கத்தைப் பார்த்தார். பின்னவருக்கு லேசான மகிழ்ச்சி. திவான், அவரைப் பார்த்துச் சிரித்துவிட்டார். அதுவே பெரிய காரியம். காரியம் கைகூடியதுமாதிரிதான். மேலும் அவர் கவனத்தை அதிக மாய்க் கவருவதற்காக சாரத்திலிருந்து கீழே இறங்கிக் கொண் டிருந்த ஒரு சித்தாள் பெண்ணை மேலே ஏறுவியா, இல்ல கீழே இறங்கி ஒரேயடியா போறியா? என்று ஒரு அதட்டுப் போட்டார். அதை திவான் ஆமோதிப்பது போல் தலையை மெல்ல மெல்ல ஆட்டுவதுபோல் இருந்தது.
பக்கம்:மூட்டம்.pdf/13
Appearance