உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூட்டம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قمتسرع / 27 மல்வேட்டிக்காரர் சங்கரசுப்பு, அந்த வீட்டிற்குள் சர்வசாதாரணமாக நுழைந்தபோது, யூனிபாரக்காரர்கள் பூட்சுகளைக் கழற்றக் கீழே குனிந்தார்கள். அந்தக் குனிவு கூட உடற்பயிற்சி போல் தோன்றியது. அபிராமி இனிமையோடு சொன்னாள். 'எங்கள் வீட்டிற்குள் வாரதுக்கு, பூட்சைக் கழட்ட வேண்டாம். அப்படியே வாங்க. அந்த யூனிபாரக்காரர்கள், அவளைதங்கள் இயக்கத்தில் ஒரு பெண் தொண்டராக அங்கீகரித்தது போல், யூனிபார்மாக புன்னகை செய்தபோது, வேட்டி மனிதரான சங்கசுரப்பு, வெட்டி மனிதர்போல் முகம் சுளித்தார். பிறகு உபதேசித்தார். 'எதை விட்டாலும்ஆச்சாரத்தை விடப்படாதும்மா...நாம் இப்படி விட்டதாலதான், துலுக்கப்பயலுக இந்த ஆட்டம் ஆடுறானுக...' அபிராமி அவர் முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டதை, சம்சுதீனுக்கு எதிராய் விடப்பட்ட சவாலாய்க் கருதி, நெளிந்தாள். அதனால் லேசாகக் கோபம் கூட வந்தது. காபி வேனுமா என்று கேட்கப் போன வாயை உதடுகளால் பூட்டிக் கொண்டாள். ஆனாலும் சங்கரசுப்பு மூச்சு இழுப்பதைப் பார்த்துவிட்டு, சிறிது பரிதாபப்பட்டுச் சொல்ல வந்ததைச் சொன்னாள். 'காபி வேணுமா, இல்லே சூஸ் வேணுமா?" சூஸ்சாப்பிட்டுவிட்டு அப்புறம் காபி சாப்பிட்டால் நல்லா இருக்கும். என்ன அப்படி பார்க்கிறீங்க! இது என்வீடு மாதிரி? இந்த 'பாப்பா என் கண்ணு முன்னாலேயே பிறந்து வளர்ந்த பொண்ணு. நில்லு அபிராமி, தப்பாச் சொல்லிட்டேன். மொதல்ல காபி கொடு. அப்புறம் சூஸ் கொடு. அப்போதான், தொண்டையும் வயிறும் வெயிலில் இருந்து ஏ.ஸி.க்குள்ள வந்தது மாதிரி இருக்கும்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/29&oldid=882390" இலிருந்து மீள்விக்கப்பட்டது