44 ராகுல் சாங்கிருத்யாயன்
இலக்கியங்களைப் படைக்க முடியாது என அவர் கருதினர் ( சுமித்ரானந்தன் பந்த் அல்லது இக்பால் கவிதையை எடுத் துக்கொள்ளுங்கள். அதை எப்படி இந்துஸ்தானியில் எழுத இயலும்?' என்று அவர் தனது சுயசரிதை-இரண்டாம் பாகத்தில் கேட்கிருர்). மக்கள் மத்தியில் கிசான் தலைவராக அவர் பணி யாற்றியதிலிருந்து, மொழி மக்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும்; அதன் உபயோகத்தின் அடிப்படையில்தான் மொழி வளர்க்கப்படவேண்டுமே தவிர, அகராதிகளின் அடிப்படையில் அல்ல என்ற உறுதி அவருக்கு ஏற்பட்டிருந்தது. செயற்கையான, வழக்கில் இல்லாத சம்ஸ்கிருதச் சொற்களைக் கொண்ட ஒரு அகராதி தயாரித்த டாக்டர் ரகுவீராவின் முயற்சியை அவர் கடுமையாக விமர்சித்தார்.
ஷாலன் சப்த கோஷ் (வித்யாநிவாஸ் மிச்ராவும் இந்நூலாசிரி யரும் சேர்ந்து தயாரித்தது. பிரயாக், இந்தி சாகித்திய சம்மேளனம் 1988-ல் வெளியிட்டது) முன்னுரையில், இந்தி சாகித்திய சம்மேளனத்தின் தலைவர் என்ற முறையில், அவர் வழிகாட்டும் கொள்கையை வகுத்துத் தந்தார். அந்த அகராதியில், இரண் டாவது பத்தி அதுவரை பிரசுரமாகியிருந்த அனைத்து அகராதி களிலிருந்தும் ஒரு பதத்தின் சகல வடிவங்களேயும் (ஒரே அர்த்தம் தருகிற சமமான பதங்கள் பலவற்றையும்) பட்டியலிட்டுக் காட்டி யது. டாக்டர் ரகுவீரா தயாரித்த வழக்கத்தில் இல்லாத சொற் கனயும் அது கொண்டிருந்தது. ஆயினும், எளிமையான, அதிகம் பேச்சு வழக்கில் உள்ள சொற்களுக்கு முதலிடம் தந்து முதல் பத்தி யில் வெளியிட்டுள்ளது. இங்கிலீஷ் டிக்ஷனரியில் Academy" என்றிருப்பது இந்தியில் Akademy' என்றுள்ளது என்பதுபோல.
நாட்டுப்புறப் பாடல்கள், மக்கள் நாடகம், நாடோடிக் கதைகள் ஆகியவற்றை ராகுல் பெரிதும் விரும்பினர். போஜ்புரி மக்கள் கவியான பிஸ்ராம் பற்றி அவர் ஒரு கட்டுரை எழுதினர். அக்கவிஞர் இளமையிலேயே இறந்துபோனர். அவர் கவிதை களைத் தொகுத்து, ஒரு தொகுதியாக ராகுல் வெளியிட்டார். பந்தல்கண்டி மக்கள்.கவி இசூரியின் கவிதைகள் பற்றியும் அவர் கட்டுரை எழுதினர். அவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத்துடன் போஜ்புரியிலும், பேராசிரியர் அமர்நாத் ஜாவுடன் மைதிலியிலும் பேசுவது வழக்கம். நைனிடாலில் அவருடைய வெள்ளி ஒக் வீட்டின் அருகாமையில் வசித்த வயோதிக மாது ஒருத்தியிட மிருந்து நாடோடிக் கதைகளையும் நாட்டுப்புறப் பாடல்காேயும் அவர் சேகரித்தார். அவற்றை ஆதி இந்தி கி ககானியா அவுர் கீதேன் என்ற புத்தகமாக வெளியிட்டார். மீரட்டிலும் ஆக்ராவிலும் பேசப்படுகிற மொழிதான் தற்கால காரி போலி இந்தியின்