சோவியத் ருஷ்ய ஞானியான லியோ டால்ஸ்டாயை, மகாத்மா காந்தியடிகள், ‘என் வழிகாட்டி டால்ஸ்டாய், அவர் சென்ற சமுதாய அறவுணர்ச்சிப் பாதையில் நான் செல்லுகிறேன்’ என்றார்.
தென்னாப்பிரிக்காவிலே ஒரு வழக்குக்காக வாதாடச்சென்ற அகிம்சை ஞானி காந்தியடிகள், டால்ஸ்டாய் பெயரிலே அங்கே கூட்டு வாழ்க்கை பண்ணையை உருவாக்கினார். அந்த அளவுக்கு டால்ஸ்டாயின் அறவுணர்ச்சி அவரை மாற்றி அமைத்தது.
அத்தகைய ஞானி டால்ஸ்டாய் பிறந்த சோவியத் ருஷ்யா இன்று பொதுவுடைமை நாடாக இருக்கிறது. ஆனால், அவரது காலத்தில் ஜார் மன்னனின் முடியரசு நாடாக இருந்தது.
பாரதியார் பாஷையிலே சொல்வதென்றால், ருஷ்யாவை ஜார் மன்னன் என்ற கொடுங்கோலன் நமது புராணங்களிலே கூறப்படும் இரண்யனைப் போல ஆண்டு வந்தான். ருஷிய அரசரை ஜார் என்பார்கள் அந்நாட்டு மக்கள். மன்னன் ஆட்சி என்பது மக்களுக்காக நீதியோடும், அறவுணர்வுகளோடும் ஆளப்படும் என்பது அரச நீதி.
ஆனால், ஜார் என்ற மாபாவி - ஆட்சி என்ற பெயரிலே, பொய், சூதுவது, தீமை, கொடுங்கோல், ஆட்சியை நடத்தி