உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

லியோ டால்ஸ்டாயின்

“சுவாமி, நூலைத் திருப்பித் திருப்பிப் பக்கங்களைப் பார்த்துவிட்டுப் போகிறீரே, தாங்கள் தேடிய கருத்துக்கள் நூலில் கிடைத்து விட்டனவா?” என்று நூலகர் அவரைக் கேட்ட போது, “அன்பரே! இந்த நூலைநான் ஏற்கனவே படித்து விட்டேன். தேவையான குறிப்புக்களை மட்டும் மீண்டும் அதன் தலைப்புக்களிலே பார்த்து நினைவு படுத்திக் கொண்டேன். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், இந்த நூலிலே உள்ள ஒரு தலைப்பைக் கூறி, அதில் கூறப்பட்டிருப்பது என்ன? என்று கேளுங்கள் சொல்கிறேன்” என்றார்.

அப்போது, நூலகர் அவர் கூறியது கேட்டு வியந்து போய் மரமாக நின்று, சுவாமி முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். உடனே மகான் விவேகானந்தர், “அன்பரே வரிவரியாகப் புத்தகத்தைப் படிப்பதும், பக்கம் பக்கமாகப் படிப்பதும், அத்தியாயம் அத்தியாயமாக அதை அணுகுவதும் சிலருடைய பழக்கம்! ஆனால், நான் புத்தகம் புத்தகமாகப் படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிவன்” என்றார்!

எனவே, விவேகானந்தர் எவ்வளவு நூல்களைப் படித்திருந்தால், ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்ததும் அதில் இருக்கும் கருத்துக்கள் இதுதான் என்று கணித்திருப்பார் என்பதை மாணவர்களும் இளைஞர்களும் எண்ணிப் பார்க்கும் போது தான் எத்தகைய ஒரு நினைத்தற்குரிய செயல் இது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்!

மகான் விவேகானந்தரின் இந்த வரலாற்றுச்சம்பவம் போல, பல நிகழ்ச்சிகளை லியோ டால்ஸ்டாய் அவரது மாணவப் பருவத்தில் சந்தித்துள்ளார்.

டால்ஸ்டாயும், அவரது உடன் பிறப்புக்களும் கல்லூரிக் கல்வி கற்றிட மாஸ்கோ நகர் கல்லூரியில் சேர்ந்தார்கள். அந்தக்