உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

லியோ டால்ஸ்டாயின்

அண்ணன் திட்டத்தின் படி டிக்லின் என்ற ராணுவக் கல்லூரியில் டால்ஸ்டாய் சேர்த்து, சில நாட்கள் பயிற்சி பெற்று, தேர்வில் தேறி, பீரங்கிப் படை வீரரானார்!

காக்கசஸ் மலைப் பகுதியில் காசியில் என்ற மலைவாழ் வகுப்பார், வழிப்போக்கர்களையும் ஊரார்களையும் கொள்ளையடிப்பதும், கொலை செய்வதுமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களை அடக்குவதற்காக அடிக்கடி சிறுபடைகளை ஜார் அரசு அனுப்பி வைக்கும். அந்தப் படைகளுடன் டால்ஸ்டாயும் அவ்வப்போது அனுப்பப்படுவார்.

காக்கசஸ் போரில் நடை பெறும் கொள்ளை, கொலைகளைக் கண்டு அவர் பதறுவார். அதனால் போர்ப் படையில் தொடர்ந்து பணியாற்றிட அவர் விரும்பவில்லை; உடனே தனது பதவி விலகல் கடிதத்தை சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பி விட்டார்.

இந்தக் கடிதம் ராணுவ அதிகாரிகள் பார்வைக்குச் செல்லும் முன்பே, கிரிமியா நாட்டுப் பகுதியில் போர் துவங்கப்பட்டு விட்டது. ஆனால் நாட்டுப் பற்று உந்திய டால்ஸ்டாய் மனம், போரிலே இருந்து விலக மறுத்து விட்டதால், அதிகாரிகளை அணுகித் தன்னைப்போர் முனைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். 1854-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவர் செபாஸ்டபூல் என்ற யுத்தக் களத்துக்கு அனுப்பப்பட்டார்.

ஆங்கிலலேயரும், பிரெஞ்சுக்காரரும் செபாஸ்டபூல் கோட்டையைச் சூழ்ந்து போரிட்டுக் கொண்டிருந்தார்கள். ஓராண்டுக்கு மேல் ருஷ்யர்கள் அக்கோட்டை முற்றுகையை எதிர்த்து எதிரிகளுடன் போர் செய்து கொண்டே இருந்தார்கள்.

டால்ஸ்டாய் படைகளுடன் அக் களத்திற்குச் சென்று பகைவர்கள் இடையே புகுந்து தனது படை வீரர்களை எழுச்சிபெறச் செய்து உற்சாகப்படுத்திப் போர் செய்து