உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஒளியும் இருளும் பற்றியெரிந்து சீறிச் சிரித்த செந்தியின் ஒளிமயக்கத்தில் புரண்டுவிட்டு, வீட்டினுள் புகுந்ததும் மனிதக் கண்கள் பார்வை மங்கித் தவித்தன கொஞ்சம் நேரம். மணமகள் ராஜத்தை அன்பாக அணைத்து மெது மெது லாக அழைத்து வந்த நீலாவதிக்கு இந்தத் தற்காலிகக் குருடுதான் காரணம் என்றில்லை, அவள் தடுக்கி விழத் தெரிந்ததற்கு! அவள் உள்ளம் அதிர்ச்சியுற்றிருந்தது. சித்தனை சிதறுண்டிருந்தது. பேயறைந்ததும் ஒரு மாதிரிப் பிரமையும் கலக்கமும் ஏற்படும் என்று சொல்வார்களே, அந்த நிலைமைதான் கவிந்திருந்தது நீலாவதிமேல்! வாசல்படி தடுக்கி மகளோடு குப்புற விழவேண்டியவள், நல்ல வேளை, நீலா, பதனம்...பதனம்’ என்று பதறிப் பாய்ந்து பிடித்துக்கொண்டார் பண்ணையார். பார்த்து தட. மெதுவாகக் கூட்டிப் போ' என்று டைரக்ட்' செய்து அழைத்துச் சென்ருர் ராஜம் மயக்க நிலையில்தான் இருந் தாள். துக்கத்தில் எழுந்து நடக்கிற வியாதிக்காரி மாதிரி நடந்தாள். அன்னையின் அணைப்பு இருந்த தல்ைதான் நடக்க முடிந்தது. இல்லையெனில் விழுந்து கிடக்க வேண்டியவள் அவன் . அவளே பூப்போல எடுத்துச் சென்று ஒரு கட்டிலில் படுக்க வைத்தார் பண்ணையார். நீலாவதி, நீகூடப் படுத் துக் கொள்ளலாமே, உனக்கு ஒய்வு தேவை. விடிகிறவரை திம்மதியாகப் படுத்துத் தூங்கு, காலையிலே மனம் சரியாப்