பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காரணம். இவர் அதைத்தம் கணக்கில் போட்டு எடுத்துக் கொள்ளலாம்.

cheque, open – திறந்த காசோலை: இது கீறாக் காசோலை. நேரிடையாகப் பணம் பெறலாம்.

cheque, order – ஆணை காசோலை: இதைப் பெறுபவர் அதைத் தம் கணக்கில் போட்டுப் பணம் எடுத்துக் கொள்ளலாம் அல்லது அடுத்தவருக்கு மேலொப்பம் செய்து, அவர் பணம் பெறுமாறு செய்யலாம்.

cheque, returned – திரும்பு காசோலை: இதைக் கொடுப்பவர் கணக்கில் பணம் இல்லாததால், பெறுபவருக்கு அவர் வங்கி மூலம் திருப்பி அனுப்பபடும்.

cheque, stale — நாட்பட்ட காசோலை: பொதுவாக, 6 மாதத்திற்கு மேற்பட்ட காசோலை. ஒரு காசோலையின் வாழ்நாள் 6 மாதம். அதற்கு மேல் அது செல்லத்தக்க தன்று.

chief executive – முதன்மை நிறைவேற்றுநர்: ஒரு நிறுவன முன்னேற்றத்திற்கு முழுமூச்சாகப் பாடுபடுபவர்.

circular letter of credit – கடன் சுற்றுக் கடிதம்: ஒரு வங்கி மற்றொரு வங்கிக்கு ஒருவருக் குச் சில நிபந்தனைகளின்படி கடன்கொடுக்குமாறு துறைக் கடிதம் எழுதுதல்.

claim-1) உரிமை 2) கோரிக்கை: எ-டு. ஊக்கத் தொகைக் கோரிக்கை.

clause - உட்பிரிவு: விதியின் கிளைப் பிரிவு.

clean price - தெளி விலை: மீ உயர் ஈட்டின் விலை.

clearance certificate – தீர்வு சான்று: பற்று ஒன்றுமில்லை எனக் கூறும் சான்றிதழ்.

clearing bank – தீர்வக வங்கி: பற்று வரவு நடவடிக்கைகளைச் செய்யும் வங்கி. இது பாரத வங்கியே.

clearing charges – தீர்வு கட்டணங்கள்.

clearing house – தீர்வகம்:பொருளாதாரத் தீர்வு வேலை நடைபெறுமிடம்.

closing cash balance-முடிவு பண இருப்பு. closing entries- முடிவு பதிவுகள்: ஆண்டு இறுதியில் ஒரு நிறுவனத்தின் இலாப நட்டக் கணக்கைக் கண்டறியப் பயன்படும் உரிய பதிவுகள்.

collecting agent - வசூல் முகவர்.

collecting bank- வசூல் வங்கி.

columnar petty cash book – சில்லறை பண ஏடு