4 வரதன் அவனுக்கு மூத்தவன் பெயர் சுந்தரன். அவர்கள் தங்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர், ஒரு வீட்டினை யன்றி வேறு ஒன்றையும் வைத் துச் செல்லவில்லை. எனினும் முருகன் தமயன்மார்கள் உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் எவ்விதமோ சம்பள மின்றிக் கல்வி கற்று வந்தனர். இவர்கள் கூட்டுற விஞலேயே தாமோதரப் பிள்ளையும், தம் ம்கன் வரதனைப் பி. ஏ. வகுப்பு வரையில் எப்பாடுபட்டேனும் படிக்க வைக்க வேண்டுமென்று எண்ணினர். முதன் முதல், தாமோதரப்பிள்ளை, தம் மகன் வர தனத் தாமே பள்ளிக்கு அழைத்துச் ச்ென்ருர். நாள் டுசல்லச் செல்ல வரதன், தன் நண்பன் முருகனேடு பள்ளிக்குச் செல்வதும், வீடு திரும்புவதுமாக இருந்தான். ஆதலால், வரதனும் முருகனும், நாள்தோறும் பள்ளி துவங்கும் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே, தங்கள் வீட்டினின்றும் புறப்பட்டு விடுவார்கள். அவர் கள் இருவரும், தங்கள் தலையின் மீது பலகை புத்தகங் ஆ&ள வைத்துக்கொண்டு, மெதுவாக ஆமைபோல் நகர்ந்து செல்வார்கள். அவர்கள் அவ்விதம் செல்லும் போது, வழியில் கோலி விளையாடும் சிறுவர்களைச் சிறிது நேரம் கண்டு மகிழ்வார்கள் : ஒருவரோடொருவர் ஆண்டையிட்டுத் தெருக் குழாயில் நீர் பிடிக்கும் ஏழை மக்கள் நிலையினை வியந்து பார்ப்பார்கள் தெருவில் இரை தேடும் கோழிகளின் சண்டையினைக் கூர்ந்து நோக்குவார்கள் : வாயிலின் புறம் கின்று. குரைக்கும் நாயின் குரல் கேட்டு அஞ்சி விஜந்து செல்வார்கள். இவ்விதம் அவர்கள் பாடசாலைக்கு அருகில் வந்ததும், தம்
பக்கம்:வரதன்.pdf/11
Appearance