உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரதன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

d வரதன் முருகன் சிறிது பருத்திருப்பான். அதனால் அவன் மேல் விரோதங்கொண்ட ஒருவன் அவனை ஒரு நாள் அடே குண்டு பெருச்சாளி என அழைத்தான். அ வரதனுக்கு நினைவு வந்தது. ஆதலால் அவன், அப், பெயரைச் சொல்லி அவனைக் கேலி செய்தான். அருகே, இருந்த சிறுவர்கள் அதைக் கேட்டுக் கை கொட்டி நகைத்தார்கள். அதல்ை முருகனுக்குக் கோம் மிகுதி யும் வந்து விட்டது. அவன் உடனே வரதனைப் பிடித்து, இழுத்துக் குனியவைத்து, முதுகில் கும் கும் என்று மூன்று முறை குத்தினன். அப்போது வரதனுக்கு, அழுகையுங் கோபமுங் கலந்து வந்தன. எனினும், அவன் என் செய்வான்? முருகனே வயதில் மூத்தவன் : அன்றி யும் வலிமை உடையவன். வரதனே வயதில் சிறியவன் ; மெலிந்த உடலினன். எனினும் வரதன் பழிக்குப் பழி வாங்கவே எண்ணினான். ஆதலால் அவன், தனக்கு அருகே இருந்த ஒரு கல்லினைக் கையாலெடுத்து முருகனைக் குறிவைத்து ஓங்கி எறிந்தான். கல்லகாலம் ! அது சிறிதே தவறியது. அன்றேல் முருகன் மண்டை பிளந்தேயிருக்கும். ஆதலால் முரு கனுக்கு மேலுங் கோபம் அதிகரித்தது. அவன் வரதன. அடிப்பதற்கு அருகே வந்தான். தன் எண்ணம் சிறிதும் நிறை வேருததால் வரதனுக்கும் அப்போது கோபம் மிகுந்திருந்தது. ஆதலால், முருகன் அருகே வந்ததும் இருவரும் சண்டை பிடித்தனர். முதலில் வரதன், முரு கன் தலை மயிரைப் பிடித்துக் கொண்டான் ; உடனே முருகன், வரதன் கழுத்தில் கையை வைத்து அழுத்தி ன்ை. நிமிர முடியாது குனிந்த வண்ணம் இருந்த வரத னுக்கு அப்போது இன்னது செய்வதென்று தோன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/15&oldid=891100" இலிருந்து மீள்விக்கப்பட்டது