கரி வேடம் 17 வரதனுக்குத் தன் வீட்டின் கதவிலக்கமும் தெரு வின் பெயரும் நன்ருகத் தெரியும். அன்றியும், அவனுக் குத் தான் படிக்கும் பாடசாலை முகவரியும் நன்ருகத் தெரியும். ஆதலால், அங்குள்ளோரிடம் இவைகளைக் கூறி வரதன் வழியறிந்து சென்றிருக்கலாம். ஆனல் அவன், பிறரைப் போய் எவ்வாறு கேட்ப தென எண்ணி ன்ை. ஆதலின் அவன், சிறிது நேரம் திகைத்து நின்ருன். பின்னர் அவன், அந்தத் தெருவில் வடக்கு நோக்கி மெல் லச் செல்லாயினன். அன்று தசராப் பண்டிகையின் ஆரும் நாள். ஆதலால் அங்குள்ள கடைகள் பலவும் மிக்க விநோதமாக அலங் கரிக்கப்பட்டிருந்தன. வரதன், இயல்பிலேயே பராக் குப் பார்க்கும் குணம் வாய்ந்தவன். வெறும் வாயை மெல்லும் ஒருவனுக்கு ஒருபிடி அவல் அகப்பட்டால் சொல்லவேண்டுமா ? வேடிக்கை விநோதங்கள் நிறைந்த அந்தப் பெரிய தெருவிலே அவன் ஒன்றையும் கவனி யாது எவ்வாறு செல்லுவான் ? அவன் ஒவ்வொரு கடை யாக நின்று நின்று பராக்குப் பார்த்தவண்ணம் மெதுவா கச் சென்று கொண்டிருந்தான். வரதன் அந்த நீண்ட தெருவில் நெடுந்துாரம் நடந்து சென்ருன். முடிவில் அவன் நான்கு தெருக்கள் ஒன்ரு கக் கூடும் ஓர் அகன்ற இடத்தினை அடைந்தான். அங்கே வெற்றிலைப் பாக்குக் கடைகளும், மிட்டாய்க் கடை களும், பழக்கடைகளும், மற்றும் பல்வேறு சில்லறைக் கடைகளும் வரிசை வரிசையாக இருந்தன. அன்றியும், அங்கே குரங்காட்டி ஒருவன் ஒரு சிறு வண்டியில் காயினைக் குதிரைபோல் பூட்டி இரண்டு குரங்குக் குட்டி களே மேன்மகனுகவும், மேன் மகளாகவும் அலங்கரித்து, 2
பக்கம்:வரதன்.pdf/24
Appearance