30 வரதன் இருந்த ஒரு சோலைக்குள் சென்று, அங்கிருந்த ஒரு கல் லின்மீது வரதனைப் படுக்கவைத்து அவன் நகைகளைக் கழற்றிக் கொண்டிருந்தான். மயங்கிக் கிடந்த வரதனுக் குச் சிறிது அறிவு வர அவன் விழித்துப் பார்த்தான். 'ஐயா, நான் எங்கே இருக்கிறேன்!” என்று ஆச்சரி யத்துடன் கேட்டான் வரதன். தாண்டவன், வரதன் கேட்டதற்கு விடையளிக்கா மல் நகைகளை விரைந்து கழற்றுவதிலேயே கருத்தாக இருந்தான். அது கண்ட வரதன் அச்சமுற்று நான்கு புறமும் சுற்றிப் பார்த்தான். எங்கும் மரங்களே அடர்ந்திருந்தன. அதனால், தாண்டவன் திருடனே என்பதை நன்கு அறிந்துகொண்டான் வரதன். ஆதலால் அவீன் அச்ச முங் கோபமுங் கொண்டவனாய்க் கண்களில் நீர் ததும்ப அழுகையோடும், ஆத்திரத்தோடும் ஒ திருடன்-திருடன் -என் நகைகளைக் கழற்றுகின்ருன்’ என்று உரத்துக் கூவின்ை. அப்போது தாண்டவன் உருத்துப் பார்த்தான். பின் னர் அவன், அடே, இப்போது நீ கூவில்ை-இதோ பார் என்று இடுப்பில் செருகியிருந்த ஒரு நீண்ட கத் தியை எடுத்துக் காட்டின்ை.
பக்கம்:வரதன்.pdf/37
Appearance