உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரதன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் உயர்ந்தவர் ? 37 விட்டு அனுப்புவார். அவ்வாறே அவர் அன்று பகலும் பிள்ளைகளின் பெயரை வரிசைப்படி கூப்பிட்டு வந்தார். அப்போது அவர், வரதன் வராமையை அறிந்து முருகனை அழைத்து வரதன் எங்கே?' என்ருர். அதற்கு முருகன், 'ஐயா, எனக்கு ஒன்றும் தெரி யாது’ என்ருன். உடனே அவர், 'யாரேனும் ஒருவனை வரத்ன் வீட் டிற்கு அனுப்பலாமா ? என எண்ணினர். வரதனைத் தாம் அன்று கால அடித்தது அவருக்கு அப்போது நினைவிற்கு வந்தது. வரதன், தன் தாய் தங் தையருக்கு மிகவும் செல்லப்பிள்ளே அந்த ஆசிரியருக் கும் தெரியும். ஆதலால் தாம் வரதனை அடித்ததற்காக அவன் பெற்ருேர், தம்மீது கோபங்கொண்டிருக்கலாம் எனவும் அவர் எண்ணினர். உடனே அவர், எழுது கோலேத் தம் வாயருகே வைத்துக்கொண்டு சிறிது நேரம் யோசித்தார்: அப்போது அங்குள்ள சிறுவர்களும் தத்தமக்குத் தோன்றியவாறு ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக் கொண்டனர், 'அடே, வரதன் இன்றைக்கு மட்டம் போட்டு விட்டான்' என்ருன் ஒருவன். 'ஆனால், நாளேக்கு அவனுக்கு நல்ல உதைவிழும்’ என்ருன் மற்ருெருவன். "ஐயோ பாவம் 1 இன்று காலையில்கூட அவன் தைபட்டான்' என்ருன் வேருெருவன். அடே, இன்று வரதன் ஏன் வரவில்லை-தெரியுமா? ம் ஆசிரியர் அடித்ததால்தான் வரவில்லை. அதை வன் வீட்டில் சொல்லிவிட்டிருப்பான்.--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/44&oldid=891159" இலிருந்து மீள்விக்கப்பட்டது