பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

9


குழந்தைகளும் உள்ளனர்; மக்கள் தமது அன்றாட உணவைப் பெற முதுகொடியப் பாடுபடுகின்றனர்; இத்தகையோர் கோடிக் கணக்கில் பல்வேறு நாடுகளில் உள்ளனர். இன்றும்கூட மரக் கலப்பபையும் மண்வெட்டியுமே உழுபவனின் முதல் கருவிகளாக இருந்துவரும் இடங்களும் உலகில் உள்ளன. இதற்கிடையில் சில மேலை நாடுகளில் தானியங்கி எந்திரங்கள் மக்களின் வேலைகளை அடக்கடி தட்டிப் பறிக்கின்றன; வேலையற்றோரின் படையில் சேரும் வற்புறுத்தலுக்கு அவர்களை ஆளாக்குகின்றன. இளைஞர்களோ தமது படிப்பை முடித்ததும் உழைப்பின் இன்பதுன்பங்களை உணர்ந்து பார்க்கும் வாய்ப்பின்றியே அந்தப் "படை"யில் சேர்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே இன்றும் தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய, பசியும் வறுமையும அற்ற ஒரு காலம் வரும் என்று கனவு காணத்தான் முடிகிறது.

நிலப்பரப்பிலிருந்து நாடுகளை முற்றிலும் துர்த்துத் துடைத்துவிடக் கூடிய போர்க் கருவிகள் மலிந்ததோர் காலத்தில் மாந்த குலம் வாழ்ந்து வருகிறது. எந்தக் கணத்திலும் குண்டுகளை எறிவதற்கும் ஏவுகணைகளை விடுப்பதற்கும் அணித்தாகவுள்ள குண்டு வீச்சு வானூர்திகளும் நீர்முழ்கிக் கப்பல்களும் உலகில் உள்ளன; இவற்றின் அஞ்சிடத்தக்க உள்ளாற்றல்களில் கடுகளவுதான் 1945ஆம் ஆண்டில் இரோசிமாவிலும் நாகசாகியிலும் புலப்படுத்தப்பட்டது.

ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் இரத்த ஆறுகள் ஒடுகின்றன. செனிவா ஒப்பந்தங்களை மிதித்துத் தள்ளிவிட்டு, தன்னிச்சை அரசுகளுக்கிடையே நிலவும் உறவுகளுக்கான அடிப்படை முறைகளையும் புறக்கணித்துவிட்டு, தென்-