வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் 19 தவிர, அலுவலகத்தில் என்னை ஏற்று எனது வளர்ச் சிக்குத் துணை புரிய அவை தயாராக இல்லை. அதற் கான வசதிகள் அவற்றை நடத்தியவர்களிடம் இருந்த தில்லை. இருப்பினும், சம்பந்தப்பட்டவர்களை நேரில் கண்டு பேசலாம் என்று நான் ஒரு யாத்திரை புறப் பட்டேன், ரயிலில்தான். மதுரையில் இரண்டு சிறு பத்திரிகை அலுவலகங் களுக்குப் போனபோது, அவை துரங்கி வழிந்து கொண்டிருந்தன. சரியாக பதில் சொல்வதற்குக் கூட அங்கே எவரும் இருந்ததில்லை. மலாயாவிலிருந்து தமிழகம் வந்து தமிழ் ராஜ்யம் கனவு கண்டு கொண்டிருந்த சி. பா. ஆதித்தன் தமிழன்’ என்றொரு வாரப் பத்திரிகையை தொடங்கியிருந்தார். ஜனரஞ்சகமான முறையில் அதை உருவாக்குவதில் தீவிர அக்கறை காட்டி வந்தார் அவர். - 'இ ந் தி ர வி லி ரு ந் து வி ல கி வ ந் த கோ. த. சண்முக சுந்தரம் மேதாவி ஆகி அதில் பல புதுமைகளும் புரட்சிகளும் செய்து கொண்டிருந்தார். சாதாரணமாக எங்கும் தென்படுகிற பெண் களின் படங்களை அட்டைப்பட சுந்தரிகள் என்று அச்சிட்டது தமிழன்’ பத்திரிகை. உள்ளே நினைத் தாலே சிரிப்பூட்டும் நிகழ்ச்சி மறக்க முடியாத சம்பவம் போன்ற தலைப்புகளில் துண்டு துணுக்குச் செய்திகளைப் பிரசுரித்தது. விறுவிறுப்பாகவும், பரபரப்பு ஊட்டும் முறை யிலும் எழுதக்கூடிய திறமை பெற்றிருந்த மேதாவி'
பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/21
Appearance