வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் | 23 ஜனவரி மாத இதழ் வெளி வருவதற்கே மிகுந்த சிர மங்கள் எதிர்ப்பட்டிருந்தன. இதற்கிடையில், கோயம்புத்துரில் நடைபெற்ற "சினிமா உலகம் என்ற மாதம் இரு முறைப் பத்திரி கையின் ஆசிரியர் பி. எஸ். செட்டியார், தனது பத்திரி கைக்கு எனது உதவி தேவை என்றும், உடனே கோவை வரும்படியும் எழுதியிருந்தார். அக் கடிதம் திருநெல்வேலி சென்று திரும்பி என்னை வந் தடைந்தது. - 'செட்டியாருக்கு ஆசை இருக்கிறது. ஆனாலும் பனம் வீட்டிலிருந்துதான் வரவேண்டும். அதுதான் கஷ்டம். திருமகள் எத்தனை காலம் நடக்குமோ தெரியாது. நடக்கிறவரை நடக்கட்டும் என்று நான் இருக்கிறேன். நீங்கள் பி.எஸ். செட்டியார் அழைப்பை ஏற்று கோவை போவதுதான் உசிதமானது என்று ஆசிரியர் மருதப்பன் சொன்னார். நானும் யோசித்து அவ்விதமே முடிவு செய் தேன். ராசி. சிதம்பரத்திடம் சொல்லி விடை பெற்றேன். - ஒரு மாத காலம் நான் புதுக்கோட்டையில் திருமகள் ஆபீசில் இருந்தேன். அந்த மாதத்தின் இதழ் அக்கால கட்டத்தில் வெளிவரவில்லை. அங்கே புருஃப் பார்க்கும் முறையை மருதப்பன் எனக்குக் கற்றுத் தந்தார். திருச்சி வந்து, வி. ரா. ரா.வை ச ந் தி த் து உண்மை நிலையை அறிவித்து விட வேண்டும் என்று முயன்றேன். நண்பர் ஊரில் இல்லை. கடிதம் மூலம் தெரிவித்துக் கொள்ளலாம் என்று எண்ணியபடி கோவைக்குப் பயணமானேன்.
பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/25
Appearance