உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் | 25 பெற்றது. சினிமா ஸ்டில்கள் பல வாரம் தோறும் கதைக்குரிய படங்களாக அச்சிடப்பட்டன. இதன் மூலம் தியாக பூமி’ படத்துக்கு விசேஷ விளம்பரம் கிட்டி, தமிழ் நாட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது. படம் மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. 'கல்கி'யை தாக்குவதற்கு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த பத்திரிகை விமர்சகர்கள் பலரும், "தியாக பூமி' படத்தையும், அதன் கதை ஆசிரியரை யும் கடுமையாகத் தாக்கி எழுதினார்கள். "சினிமா உலகம்’ பத்திரிகையும் அதில் முக்கிய பங்கு வகித்தது. கடைசியில், தியாக பூமி பற்றி தமிழில் வெளி வந்த தாக்குதல் விமர்சனங்கள் அனைத்தையும் தொகுத்து விசேஷ வெளியீடு ஒன்றை யும் அது பிரசுரித்தது. தீபாவளி மலர், பொங்கல் மலர், ஆண்டு மலர் என்று சினிமா உலகம் சிறப்பு வெளியீடுகள் பிரசுர மாவதும் உண்டு. அவை தரமான தயாரிப்புகளாக இருந்தன. எனவே நான் சினிமா உலகம் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். 1943 பிப்ரவரி யில் கோயம்புத்துார் போய் சேர்ந்தேன். அதில் சேர்ந்து உழைக்க ஆரம்பித்த சில மாதங் களிலேயே எனக்கு நன்றாக விளங்கி விட்டது சினிமா உலகம் வளர்ச்சியில் ஆர்வம் கொள்ளாத ஒரு பத்திரிகை என்று. அதன் ஆசிரியர் பண்டிதர் பி. எஸ். செட்டியார் பிசினஸ் ரீதியில்தான் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார்,