உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வவ்விக்கண்ணனின் போராட்டங்கள் புதுமைத் தமிழ் இலக்கியத்தில் கடந்த ஐம்பது அறுபது வருடங்களில் உயர்ந்த, சிறப்பான, படைப்பு நூல்கள் பல வந்துள்ளன. அவை ஒரு பதிப்பு மட்டுமே வெளியாயின. மீண்டும் மீண்டும் பதிப்பிடப் பட்டிருக்க வேண்டிய அந்தப் புத்தகங்களின் (முதல் பதிப்பு) பிரதிகள் இப்போது கிடைப்பதுமில்லை. நாட்டின் நிலைமை இவ்வாறு இருக்கையில் தமிழ் வளமானது, நல்ல வளர்ச்சி பெற்றிருப்பது என்று பெருமை பாராட்டிக் கொண்டிருப்பதில் அர்த்தமு மில்லை; பிரயோசனமும் இல்லை. நான் நவசக்தி'யில் சேர்ந்த சமயம் மயிலாப்பூர் அல்லயன்ஸ் கம்பெனிக்குப் போய் குப்பு:ஸ்வாமி ஐயரைக் கண்டு பேசினேன். அவர் மகிழ்வோடும் பிரியத்துடனும் பழகினார். தமிழ் நாட்டுச் சிறு கதைகள் வரிசையில் எனது கதைகளையும் வெளியிடு வதாகச் சொல்லி, கதைகளை தொகுத்துத் தரும் படி கேட்டார். - நானும் சில கதைகளை சேர்த்துக் கொடுத்தேன். அவற்றை பட்டாசுக் கட்டு என்ற பெயரில் புத்தக மாக்கலாம் என்று ஐயர் தெரிவித்தார். பட்டியலி லும் அந்தப் பெயரை அச்சிட்டு விளம்பரப்படுத் தினார். ஆனாலும், அல்லயன்ஸ் வெளியீடாக என் சிறு கதைத் தொகுப்பு பிரசுரம் பெறவேயில்லை. ஊர் மாற்றம் - - சக்திதாசன் இலங்கையிலிருந்து திரும்பி வந்த பின்னரும் நவசக்தி'யின் நிலைமை தேறிவிடவில்லை.