15 & வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | ஆகவே, மீனு மேலும் அதிகமாக உளறிக் கொட்டினாள் அப்பா வீடு திரும்பியதும், இன்னிக்கு 'மீனுக்குட்டி ன்ன செய்தாள் தெரியுமா ? என்று அம்மாவுட், ':னம்மா எவ்வளவு சமத்தாப் பேசுகிறா என்கிறே !' என்று பாட்டியும் செய்தி ஒலிபரப்பத் தொடங்குவர். இதனால் எல்லாம் மீனு பெரியதனம் பெற்று வநதாள. பெரியவர்களுக்கு மனமிருந்தால் குழந்தையைக் கொஞ்சுகிறார்கள். குழந்தையின் சிறு செயலைக் கூடப் பெரிதுபடுத்தி மகிழ்கிறார்கள். வாழ்க்கை வெய்யில் அவர்கள் உள்ளத்தை வாட்டுகிறபோது, பெரியவர்கள் தங்கள் எரிச்சலையும் கசப்பையும் குழந்தைகள் மீது காட்டுகிறார்கள். மீனுவின் அம்மாவும் அப்பாவும் பாட்டியும் மனிதர்கள் தானே ! மீனுக்குட்டியை, 'ஏ குரங்கே! தரித்திரம் சனியன், என்றும் அவர்கள் திட்டுவது உண்டு. கோபம் அளவுக்கு அதிகமாகி விடுகிறபோது, குழந்தைதானே !' என்று எண்ணாமல் அதை மொத்து மொத் தென்று மொத்துவார்கள். பிறகு கொஞ்சாமலும் பாராட்டாமலும் இருந்து விடுவார்களா ? இருக்கத்தான் முடியுமா அவர்களால் ? மீனாம்மாளுக்கு எல்லாமே பழகிப் போய்விட்டது. பெரியவர்கள் அடித்தால், அழ வேண்டியது. ஏசினால், பேசாமல் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அல்லது, மூஞ்சியைச் சுழித்து வவ்வவ்வே காட்டலாம். அப்புறம் தன் இஷ்டம் போல் காரியங்களை செய்ய வேண்டியது! இப்படி ஒரு நியதி ஏற்படுத்திக் கொண்டாள் அவள். எனவே, மீனுக்குட்டி எல்லோருக்கும் எப்போதும் ஓயாத தொல்லை யாகவே விளங்கினாள். வீட்டில் உள்ள பொருள்களுக்குக் காலனாகத் திகழ்ந்தாள்.
பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/17
Appearance