22 வல்லிக்கண்ணன்
இன்னும் பத்து வருடங்களுக்குப் பிறகு போய் பார்த்தால், குட்டி நகரமான நெய்வேலி ஒரு பக்கா நகரமாக அதன் சகல வசதிகளோடும் குறைபாடுகளோடும் - மாறியிருப்பதைக் காண நேரிடும்.
புதுநகரமான நெய்வேலியில் தெருக்களுக்கு பழமைத்தனமாகவும் பாடாவதித் தனமாகவும் பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஏதாவது பெயர் வேண்டும்; வை சும்மா எதையாவது! - திருச்சி ரோடு, ராமநாதபுரம் ரஸ்தா, கோதாவரி சாலை, கங்கா சாலை, காவேரி சாலை. இப்படி பொருத்தம் இல்லாத விசித்திரப் பெயர்கள். இதைவிட அமெரிக்கர்கள் செய்தது போல, 1வது தெரு, 2வது தெரு, 10வது தெரு என்ற தன்மையில் வரிசைப்படுத்தி எண்களை தெருக்களின் பெயராக வைத்திருக்கலாம். வசதியாக இருந்திருக்கும்.
இந்தத் தெருக்கள் அமைதியானவை. அழகிய ஓரங்களைக் கொண்டவை. இவற்றில் நடந்து போய்வருவது இனிமையான விஷயம்.
மெயின் பஜார் என்று ஒன்று இருக்கிறது. ஒரே பஜார் தான். வேறு எங்கும் கடைகளும் இல்லை. அப்புறம் என்னத்துக்காக மெயின் சேர்க்கனுமோ, தெரியவில்லை. சத்திரவளைவு மாதிரி வளைந்த அமைப்பில் கட்டிடங்கள். சுமார் 20 கடைகள். சகல வகையானவையும். ஜவுளிக் கடைகள் அதிகம். ஒரே ஒரு 'புக் ஷாப்
ஒரு காஃபி ஹவுஸ் - இந்தியா காஃபி ஹவுஸ்.
இங்கே நல்ல காப்பி, ருசியான கார வகைகள், அருமையான "ஸ்வீட் தினுசுகள் கிடைக்கின்றன. இந்தியா காஃபி ஹவுஸ்" என்பதனால், அதுக்குரிய பெரியதனத் தோற்றம். பெரிய தோரணைவாலாக்கள், 'வாலிகளும்கூட வருகை போகை எல்லாம் உண்டு.
புதுமைப்பித்தன் ஒரு மொழிபெயர்ப்புக் கதையில் சூரியன் குஞ்சு போன்ற டோனா ஸெல் என்று எழுதியிருக்கிறார். உலகத்தில் 'சூரியன் குஞ்சுகளுக்குப் பஞ்சமில்லை. சந்திரன் குஞ்சுகளுக்குக் கூட 'நீலக்குயில் என்ற மலையாளப் படத்தில் கோமளத்திங்களின் கிடாவே' என்று ஒரு பெண் விளிக்கப்படுகிறதாக ஜெயகாந்தன் சொல்லிக் கொண்டிருந்தார். கிடா என்பதற்கு பதில் கோமளத் திங்கள் குட்டி' என்று இருந்திருக்கலாம்! கோதி. குட்டிகளுக்கும் குறைவில்லை இந்த நாட்டிலே,
காஃபி ஹவுசில் சூரியன்குஞ்சு போன்ற மடோன்னா ஒருத்தி காட்சி அளித்தாள். அவளே கோமளத்திங்கள் ஆகவும் இருந்தாள். அவளுக்கு ஏற்ற "Made to each other' ஜோடியும் வந்திருந்தான். நல்ல