உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 3.3

ராஜவல்லிபுரம். 29-12-30

அருமை நண்பர் சமுத்திரம் அவர்களுக்கு,

வணக்கம், நலம். நீங்களும் உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். உங்கள் 19ஆம் தேதிக் கடிதம் கண்டு மகிழ்ந்தேன்.

நான் ஜனவரி 6ம் தேதி இங்கிருந்து புறப்படுவேன். 7ல் சென்னையில் இருப்பேன். -

செப்டம்பர் 7ல் சென்னையை விட்டு நீங்கினேன். ரயில் போக்குவரத்தில் 8-ஆம் தேதி திண்டுக்கல்லில் இறங்கி, நண்பர் கமலவேலன் வீட்டில் ஒருநாள் தங்கிவிட்டு, 9ல் பஸ் மூலம் ஊர் வந்து சேர்ந்தேன்.

4 மாதங்கள் ஆச்சு.

நான் செய்ய விரும்பியது வேறு. செய்ய இநரிட்டது வேறுவேறு. செய்யவேண்டும் என்று எண்ணியதில் எதையுமே செய்யவில்லை - செய்ய முடியவில்லை. வாழ்க்கை இப்படித் தான் போய்க் கொண்டிருக்கிறது.

இதுக்காக வருத்தப்படுவதிலும் அர்த்தம் இல்லை. எதுக்காக வருத்தப்படுவதிலும் எவ்விதமான அர்த்தமும் கிடையாது. அதனால், நான் வருத்தம் கொள்வதே இல்லை.

எல்லாமே அனுபவங்கள். புதிய புதிய அனுபவங்கள். அவையே

o -- o அங்கோஷங்கள் - rெங்கள் # : يتنج تتيحه: تBi نتية

சந்தோஷங்களே வாழ்க்கையின் பயன்கள்-இனிமைகள்செல்வங்கள்.

சந்தோஷங்கள் பணத்தினால், எதிர்ஸெக்ஸ் தொடர்புகளினால், வேறு எது எதினால் மட்டுமே கிடைப்பதில்லை. அவற்றாலும் கிடைக்கும். அவை இல்லாமலும் கிடைக்க முடியும்.

உண்மையான சந்தோஷங்கள் அவரவர் உள்ளத்திலேயே முகிழ்க்கின்றன. மலர்கின்றன. மணம் பரப்புகின்றன.

அவரவர் சந்தோஷங்களை அவரவரே உண்டாக்கிக் கொள்ள வேண்டிய வாழ்க்கை நிலை - சமூக நிலையே நீடித்து வருகிறது.

அவரவர் மனசுக்குத் தக்கபடி, அவரவர் இயல்புகளுக்கு ஏற்ப,

அவரவர் உணர்வுகளுக்கும் ஆற்றலுக்கும் தகுந்தபடி, சந்தோஷங்கள் புஷ்பிக்கும்.