உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 1 வல்லிக்கண்ணன் கதைகள் காத்தலிங்கம் எஸ்டேட் காவல்காரனாகச் செல்வதில் மீனாட்சியும் மகிழ்வடைந்தாள். நான் குத்தலாகப் பேசி னதுக்காகப் பிறகு வருத்தப்பட்டேன். என்னை மன்னிச்சிரு மாமா என்று கெஞ்சலும் கொஞ்சலுமாகப் பேசி, காந்தச் சிரிப்பை வீசினாள். முரடனான காத்தலிங்கத்திடம் கூட அந்தக் கண்களை எதிர்த்து நிற்கும் சக்தி இல்லை. அவன் தேன் குடித்த குரங்கு மாதிரி, அவள் முகத்தைப் பார்த்து இளித்தபடி நின்றான். - ○ குறுங்குடிக்கும் டவுனுக்கும் நடுவிலிருந்தது பண்ணை யாரின் எஸ்டேட். பலவித மரங்களும் நின்றன. அங்கு. மா, பலா, முதலிய பழ மரங்களும், பனை, வேலமரம், கருவை போன்றவைகளும் நிறையவே இருந்தன. மாந்தோப்பு மத்தி யில் பங்களா என்று பெயர் பெற்ற சிறு வீடு ஒன்றும் இருந் இது . - அங்கேயே தங்கியிருந்து வெகு காலமாகக் காவல் புரிந்து வந்த கிழவன் இறந்து விட்டான். அதன் பிறகு யார் யாரோ வந்தார்கள், போனார்கள். சரியான ஆள் கிடைக்கவில்லை. விறகு விற்றுப் பிழைப்பவர்கள் மரக் கிளைகளை வெட்டிச் சென்றார்கள். சிறு சிறு மரங்களை வெட்டிச் சாய்த்துப் பாழ் படுத்தினார்கள். மரங்களைத் திருடிச் சென்றார்கள். இவற் றைத் தடுத்தாக வேண்டும். எனவே, கடுமையாகவும் கண்டிப் பாகவும் காவல்காரன் நடந்துகொண்டால்கூட பண்ணையார் குறை கூறமாட்டார்; மசிழ்ச்சியே கொள்வார் என்று கணக்கு பிள்ளை காத்தலிங்கத்திடம் அறிவித்தார். நியாயமாக நடந்து, தனது கடமையை நிறைவேற்றுவதாக அவனும் வாக்களித்தான். அதன்படி செயல் புரியவும் அவன் தவறவில்லை. காத்த லிங்கம் காவலுக்கு வந்து விட்டான் என்று கேள்விப்பட்டதுமே