வல்லிக்க ன்ைனன் 13. பயந்து ஒதுங்கியவர்கள் பலர். அவனைக் கண்டு அஞ்சி ஒதுங்கியவர்கள் சிலர். அவன் கையில் அகப்பட்டு, அடிப்பட்டு, தப்பு சாமி. இந்த ஒரு தடவை மாப்பு விடுங்க சாமி. இனி இப்படி செய்ய மாட்டேன்’ என்று அலறிப் புடைத் துக் கொண்டு ஓடியவர்கள் அநேகர். காத்தலிங்கம் தன் கையில் அகப்பட்டவர்களுக்கு இஷ்டம் போல் தண்டனை கொடுத்தான். மனம் போன போக்கில் பாட்டுப் பாடியும் சீட்டியடித்தும் திரிந்தான். இருந்தாலும் ஊருக்குள் உலவியது போல் இல்லை இது என்ற மனக்குறை. அவனுக்கு உண்டு. O ஒரு நாள் பிற்பகல், வெயில் நேரம். வழக்கமாகக் காத்தலிங்கம் காட்டின் பக்கம் வருகிற வேளை அல்ல அது. அன்று, இந்த வெயிலுக்கு மரத்தடியில் விழுந்து கிடந்தால் சுகமாக இருக்கும். நிழலும் காற்றும் ஜிலுஜிலு வென்றிருக் கும்’ என்று அவன் மனம் ஆசைகாட்டியது. கால்கள் அங்கு போக வேண்டியதுதானே! அவன் அந்த நேரத்தில் அவ்விடம் வந்ததும் நல்ல தாயிற்று என்ற குதுரகலம் உண்டாயிற்று அவனுக்கு. தூரத் தில் வரும் பொழுதே அவனது கழுகுக் கண்கள் ஏதோ திருட்டு வேலை நடக்கிறது என்று உணர்ந்து விட்டன. எச் சரிக்கையோடு நடந்தான் அவன். இரண்டு பெண்கள் விறகு, சேகரித்துக் கொண்டிருந்தார்கள். அவனது பண்பின்படி அவன் வாய் வசவுகளை அள்ளி வீசியது. அவன் ஏசிக்கொண்டே வருவதை உணர்ந்த பெண் கள் திடுக்கிட்டு, செய்யும் வகை அறியாமல் திகைத்து நின்று விட்டார்கள். அவன் பக்கம் முகம் திருப்பவேயில்லை. ‘முகத்தைக் காட்ட வெட்கமாக இருக்குதோ?’ என்று: கேட்டு, இரண்டு ஏச்சுக்களையும் சேர்த்துச் சொன்ன காத்த
பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/22
Appearance