வல்லிக்கண்ணன் கதைகள் 31 அவரிடம் சொல்வதிலேயே ஆர்வம் கொண்டாள். தன் பெற்றோர்களிடம் கூட அவள் அவ்வாறு மனம் திறந்து பேசுவதில்லை. இவ்வாறு காலம் ஓடியது. சொக்கலிங்கத்தை வழக்கமாகப் பற்றுகிற மனநோய் திரும்பவும் தலைகாட்டியது. இந்த இடத்துக்கு வந்து இரண்டு, வருஷங்களுக்கு மேலாகிவிட்டன. பார்க்கப் போனால், இந்த இரண்டு வருஷமும் வீணாப் போன மாதிரித்தான். நான் உருப்படியாக எதுவும் செய்யவே இல்லையே' என்று அவருக்கு உளப் புழுக்கமும் மன வேதனையும் தோன்றின. வேறு இடம், இன்னொரு ஊர் என்று மனம் ஆசைப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் தீவிரமாகச் செய்து முடித்தார் அவர். வீட்டுக்காரர்களிடமும் அறிவித்தார். அவர்கள் வருத்தப்பட்டார்கள். 'பத்மாதான் ரொம்பவும் வருத்தப்படுவா. உ.ம். என்ன செய்றது! கொஞ்சநாள் அழுதுகொண்டிருப்பாள். பிறகு சரியாகி விடும் என்று: சொன்னார்கள் . அவர் தன் முடிவை பத்மாவிடம் தெரிவித்தபோது, என்ன, விளையாடுறீங்களா என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். அவர் அழுத்தமாகக் கூறவும், 'பொய்... பொய் சொல்றீங்க!' என்றாள். அவர் உண்மைதான் என்று சொன்னதும். அவள் முகம் வாடியது. ஏன் போlங்க? ஏன் இங்கிருந்து போகனும்?' என்று தினமாக விசாரித்தாள். - அவர் கூறிய சமாதானங்கள் அவளுக்குப் பிடிக்கவு மில்லை; புரியவும் இல்லை. * நீங்க போகவேண்டாம், மாமா. இங்கேயே இருங்க, நான் உங்களுக்குத் தொந்: தரவு கொடுக்க மாட்டேன்' என்றாள்.
பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/41
Appearance