4
வஞ்சம்
'அவனாலே ஆகாத காசியம் எதுவுமே இருக்க முடியாது. நினைச்சால், புலிப்பாலைக்கூடக் கறந்துகொண்டு வந்துவிடுவான்'என்று மகிழ்ந்து போகும் பெரியவர்கள் உண்மையைத்தரன் சொன்னுர்கள்.
புன்னைக்காடு வட்டாரத்தின் சர்வ சக்தி பெற்ற ராஜா ஒண்டிப்புலிதான். எவன் தலையையாவது கொண்டு போகவேண்டுமா? பாளை சீவுகிற மாதிரிச் சீவப்பட்டு விடும் அந்த நபரின் தலை, அழகிய பெண் எவளாவது புலியா பிள்ளையின் கண்ணிலே தென்பட்டால் அவளுககு ஆபத்துதான். அப்புறம் அந்த எல்லையில் அவள் தட்டுப்படமாட்டாள். பண்ணையார் ஒண்டிப்புலியின் ஆசைக்கு அவள் இணங்கியிருந்தால் அவளுக்கு நல்லது கிட்டியிருக்கும். அவள் சண்டித்தனம் பண்ணியிருந்தாலோ அவளது பிரேதம் எதோ கள்ளிப்புதரிலோ-தாழம் பற்றிலோ - தன்னிர் கசத்திலோ சரண் புகுந்துவிடும்
பண்ணைக்காட்டுப் பண்ணையார் ஒண்டிப் புலியா பிள்ளை பெரிய சர்வாதிகாரி மாதிரித்தான். அவரது வட்டாரத்திலே அவர் இட்டதுதான் சட்டம். அதனால் அவரை எண்ணி நடுங்கியவர்களுக்குக் குறைவில்லை. அவரைப் பாராட்டியவர்களின் தொகையும் அதிகம் உண்டு.காரணம் அவர் வீட்டுக் காவல் நாய்கள் மாதிரி வளைய வருகிறவர்களுக்கு, அவர் நிறையத் 'தீனி போடுவது' வழக்கம்.
தனக்கென ஒரு சட்டமும் வாழ்க்கைத் திட்டமும் வகுத்துக்கொண்டதால், தன்னை அடக்கி ஒடுக்கச் சட்டங்களிடும் ஆட்சி இலாகாவினரை அவர் தனது பரம விரோதியாகக் கொண்டிருந்தார்.
ஒண்டிப்புலியா பிள்ளை அபாயகரமான ஆசாமி என்று எடை போட்டு வைத்திருந்த ஆட்சி இலாகாவினருக்கு, 'அவர் அடக்கப்படவேண்டிய புள்ளி' என்று