உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 வஞ்சம்




எல்லாவற்றையும் ஆராய்ந்து தீர்த்துக் கட்டுவதற்காகத்தான் இன்ஸ்பெக்டர் எல்லைக்குநாத பிள்ளை அந்த வட்டாரத்திற்கு அனுப்பப்பட்டிருகதார்.

"ஒண்டிப்புலி என்ன பெரிய மம்மாவோ !" என்று கெக்கலித்தார் இன்ஸ்பெக்டர் பிள்ளை.

“பூடம் தெரியாமல் சாமி ஆடவந்த பூசாரி அவன். சரியான பாடம் படிக்கப் போகிறான்!” என்று ஆரவாரித்தார் ஒண்டிப் புலி.

இரண்டு பேரிடமும் பழகிப் பேசித் தூண்டிவிட்டு வத்தி வச்சு வாழும்' அன்பர்கள் அந்த வட்டாரத்திலும் இருந்தனர்.

ன்ஸ்பெக்டர் எல்லைக்குநாத பிள்ளை செயல் திட்டங்களிடும் முன்பு, சுற்றுப்புறங்கள்-எதிராளியின் வலு-வட்டாரத்து நிலைமை முதலிய சகல விஷ பங்களேயும் ஆராய்ந்தார்.

ஒண்டிப் புலியா பிள்ளையைப் பற்றிய பழைய ரிக்கார்டுகளைப் படித்துப் பார்த்து, அவை கவைக்கு உதவாதவை என்று ஒதுக்கி விட்டார். ஊரில் உள்ள பிரமுகர்கள், சாதாரண ஆசாமிகள் பலரிடம் விசாரித்துப் பார்த்தார்.

இவ்வித விசாரணைகளினுல் எல்லாம் அவர் முக்கியமாகப் புரிந்துகொள்ள முடிந்த ஒரு பெரிய உண்மை, ஒண்டிப் புலியா பிள்ளை ஒரு மர்ம மனிதன். அவரைப பற்றிய விவரங்களைத் தெளிவாக அறிந்துகொள்ளவே முடியாது' என்பதுதான்.

ஒவ்வொருவர் ஒவ்வொன்றைச் சொன்னர்கள். பலர் அளவுக்கு அதிகமாகப் புளுகியிருக்கலாம். பலர் மழுப்