உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

கொண்டு போவதில் பயனில்லை என்பதுபோல, ஆங்தாங்கே இருந்த அரைகுறை ஓவியங்களையும் இடிபாடுகளையும் சுட்டிக்காட்டி, அவற்றையே ஆதாரமாக்கி, இதன் தோற்றத்திற்குத் தங்கள் நாட்டைத் தாயகமாக்க அனைத்து நாடுகளுமே முயற்சியை மேற்கொண்டுள்ளன.

கி.மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த பண்டைய பாரசீக மக்கள், திருத்தமடையாத வளைந்த கோல் ஒன்றை வைத்துக் கொண்டு ஆடியதாகவும், அதுபோன்ற விளையாட்டு ஒன்றை பாரசீக மக்களிட மிருந்து பெற்று கிரேக்கர்கள் விளையாடி மகிழ்ந்ததாகவும், பின்னர் கிரேக்கத்தை ஆண்ட ரோமானியர்களுக்கும் இந்த ஆட்டம் இனிதாக இருந்ததால் அவர்களும் ஆடி மகிழ்ந்தனர் என்றும் சரித்திர ஆசிரியர்கள் படம் பிடித்துக் காட்டிச்செல்கின்றனர்.

ரோமானியர்கள் மூலமாக, இந்த விளையாட்டு பிரான்சுக்குப் பயணமானது என்றும், பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் மணஉறவு, மற்ற ஆட்சி முறை உறவு போன்றவைகள் நெருக்கமாக நிறைந்து இருந்ததால், அங்கிருந்து இங்கிலாந்து காட்டிற்குக்கடல் கடந்து வந்தது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் ஒரு வடிவமுள்ள வரலாற்றையும் வடித்துக்காட்டியிருக்கின்றனா்.

இவைகளுக்கு ஆதாரமான சான்றுகளையும் இனி நாம் காணலாம். பழங்கால கிரேக்க கலைகளிலும், எகிப்தியரின் சித்திர எழுத்து முறையிலும் வளைகோல் பந்தாட்டம் போன்றதொரு ஒப்புமை உள்ள உருவ முறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.