உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

காட்டி நிற்கும் ஒரு சொல். அது இக்குறளின் இறுதியில் நின்று துன்ப நிறைவையும், பொருட்குறைவையும் காட்டுவதோடு, வள்ளுவரது புலமையையும் காட்டி நிற்கிறது.

வறுமைவாய்ப் பட்டவன் அடையும் துன்பம் அளவு கடந்தது எனினும் வள்ளுவர் அதற்கொரு அளவு காட்ட முயன்றார்; முடியவில்லை. சம அளவு துன்பத்தை விளைவிக்கும் ஒன்றையாவது காட்டியாக வேண்டும் என எண்ணினார். வெற்றி பெற்று நமக்கும் காட்டிவிட்டார். அது எது தெரியுமா? "வறுமை விளைவிக்கின்ற அளவு துன்பத்தை விளைவிக்கக்கூடியது வறுமைதான்" என்பதே.

வறுமைத் துன்பத்திற்கு ஒரு உவமைத் துன்பத்தையும் காட்ட வள்ளுவர் தேடி அலைந்தார். சாவுத் துன்பம் எதிர்ப்பட்டது. அது துன்பமே அல்லவே என ஒதுக்கி விட்டார். கொலைத் துன்பம் குறுக்கிட்டது. 'இது ஒரு சிறு துன்பந்தானே, கொல்லப்பட்ட பிறகு அத்துன்ப மிராதே' எனத் தள்ளிவிட்டார். இறுதியாக அவர் கண்ட உவமைத் துன்பம் எது தெரியுமா? கொல்லாமற் கொல்லும் கொடுமை, அக்கொடுமையை, இக் குறளிலுள்ள "கொன்றது போலும்” என்ற உவமையிற் காணலாம். கொன்றது போலும் என்பதால் கொல்லாமையே பெறப்படுகிறது.

நெருநல் என்பது நேற்று என்றாகும். "நேற்று வந்த துன்பம்" என்றே இதற்குப் பலரும் பொருள் கூறியிருக்கிறார்கள். நானும் அப்படித்தான் படித்தேன். அது தவறு. குறளில் நெருதல் மட்டுமில்லை. 'உம்' ஒன்றும் அதனுடன் சேர்ந்திருக்கிறது. அதற்கு 'நேற்றும்' என்று பொருள் காண்பதே உண்மையாக விருக்கும். இதனால் வறுமைத் துன்பம் அவனை நேற்றுமட்டும் வந்து வருத்த