உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

6. 'அண்ணா, பழுத்த கனிகள் இன்பத்தைக் கொடுப்ப தற்கு இருக்கும்போது, காய்களைப் பறித்துத் தின்று துன்பப்படலாமா?’ 'தம்பி, குறட்பாவின் கருத்தை, நான் சொல்லுவதற்கு முன்பு, நீயே சொல்லிவிட்டாயே!” அப்படியா அண்ணா, எங்கே அக்குறட்பாவை, சொல் லுங்கள், எழுதிக் கொள்ளுகின்றேன்.” "இதோ சொல்லுகிறேன் தம்பி! எழுதிக் கொள்: ! இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந் தற்று' எழுதிக் கொண்டேன் அண்ணா.: எழுதிக் கொண்டாய் அல்லவா? பிறகு என்ன ஏதோ நினைத்துக் கொண்டிருக்கிறாய். சொல் தம்பி.” 'ஒரு சந்தேகம் அண்ணா? என்ன சந்தேகம் தம்பி. தாராளமாகக் கேள். தெளிவு படுத்துகிறேன்.” "இந்தக் குறட்ாாவில், இன்னாத கூறல் என்றால் என்ன அண்ணா?” "அப்படிக் கேள் தம்பி. இன்னாத கூறல்” எனறால், நன்மையல்லாத, துன்பத்தைத் தரும் சொற்கள், என்று அர்த்தம். மற்றொன்றும் சொல்லுகிறேன் தெரிந்துகொள். காய்கவர்ந் தற்று’ என்றால், காய்களைப் பறித்துச் சாப் பிடுவது போன்றதாகும். இப்பொழுது குறட்பா முழுவதும் நன்றாக விளங்கியிருக்குமே.” 'நன்றாக விளங்கிவிட்டது. இப்போது நானே சொல்லு கிறேன். கேளுங்கள் அண்ணா. இனிமையான வார்த்தை களையே பேசவேண்டும். தனக்கும் மற்றவர்களுக்கும்