உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

7

துன்பம் தரும் வார்த்தைகளைப் பேசக் கூடாது. அப்படிப் பேசினால், இனிமை தரும் கனிகளை விட்டுவிட்டு, துன்பம் தரும் காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றதாகும். சரிதானே அண்ணா.” -- "நீ கெட்டிக்காரன், தம்பி! எழுந்திரு, போகலாம்.' எங்கே போவது? வீட்டிற்கா அண்ணா, அதற்குள்ளா கவா?” - இல்லை தம்பி, அதோ குளம் தெரிகிறது, பார், அங்கே போகலாம்: அது இந்த ஊரிலே மிகவும் பெரிய குளம். அதை ஏரி என்றுகூட சொல்லுவார்கள். ஒரு கரை யிலே இருந்து பார்த்தால் மற்றொரு கரைகூட தெரியா தாம். அவ்வளவு பெரிசு. உனக்கு அதைப்பார்க்க ஆசை யில்லையா?” அண்ணா, அண்ணா: தண்ணிர் என்றால் எனக்கு ரொம்பவும் ஆசை. வாங்க அண்ணா போகலாம்.' (போகிறார்கள்)