உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

2 சூதாட்டம் வேண்டாம் "அது என்ன அண்ணா? அங்கே போகிறீர்கள்?’ அதுவா தம்பி! சொல்லுகிறேன். என் கூடவே, வா! அது படித்துறை மண்டபம். அங்கே உயரமான மேடை கட்டியிருக்கிறார்கள், பார்த்தாயா? அதன்மேல் உட்கார்ந்து கொண்டால் எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்கலாம்.' "இதோ, ஒடி நான் முதலில் உட்கார்ந்துகொள்கிறேன் அண்ணா!' 'மெதுவாக, போ தம்பி! வேகமாக ஓடாதே. நானும் வந்து உட்கார்ந்துகொள்ளுகிறேன்.” எப்படி இருக்கிறது பார்த் தாயா? இந்தக் குளத்தில் பரந்து கிடக்கும் இலைகளின் பசுமை நிறத்தைப் பார். பல வண்ணங்களில் காட்சியளிக்கும் பூக்களையெல்லாம் பார்! எவ்வளவு அழகாக இந்தக் காட்சி இருக்கிறது. என்ன தம்பி! நான் சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்க்காமல், நீ எதையோ பார்த்துக்கொண்டிருக்கிறாயே! என்ன அது? "இதோ, மண்டபத்தின் பக்கத்திலேயே பாருங்கள் அண்ணா! அதைப் பார்க்கப் பார்க்க எனக்குப் பெரிய வியப் பாக இருக்கிறது. நான் இதுமாதிரி பார்த்ததே இல்லை அண்ணா! அந்த ஆள் செய்கிற வேலை எனக்கு வேடிக்கை யாக இருக்கிறது.” "ஓ! அதுவா! வேடிக்கை இல்லை தம்பி அது. வேடிக் கையும் இல்லை-விளையாட்டுமல்ல! அதில் வேதனையும் இருக்கிறது; பெரிய விளக்கமெல்லாம் இருக்கின்றன. நான் பார்ப்பதற்குள், நீ பார்த்து விட்டர்யே! அதுதான் சின்ன