உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

9

பிள்ளைகளின் ஆற்றல். அவன் என்ன செய்கிறான் தெரி யுதா? நன்றாகப் பார்! மீன் பிடித்துக்கொண்டு இருக்கின் றான்.” "அப்படியா அண்ணா! எனக்குத் தெரியாதே.’ "உனக்கு எப்படித் தம்பி தெரியும்? நீ சின்ன பிள்ளை ஆயிற்றே! இப்படி பலபேர் மீன் பிடிப்பார்கள். நீ இப் போதுதான் முதன்முதலில் பார்க்கிறாய். அவன் என் னென்ன செய்கிறான் என்பதை நன்றாகப் பார்த்து எனக்குச் சொல்.’ சொன்னால், நீங்கள் என்னண்ணா செய்வீர்கள்? 'நீ எனக்குச் சொன்னால் நான் உனக்குப் பெரிசாக ஒன்று சொல்லுவேன்.” 'உம்...தெரிந்துகொண்டேன் அண்ணா, அவன் பக்கத் தில் ஒரு கூடை வைத்திருக்கிறான். கையில் ஒரு குச்சியை நீட்டி வைத்துக்கொண்டு இருக்கிறான். இதோ சொல்லி விட்டேனே!’ தம்பி, எனக்கு நீ சொல்லுவதைக் கேட்டால் சிரிப்புத் தான் வருகிறது. அவசரப்படக் கூடாது. பொறுமையுடன் எதையும் கவனித்துப் பார்க்கவேண்டும். அவன் செய்வது மிகப் பெரிய காரியம்தான் தம்பி! சரி, நான் கேட்பதற்கு நீ பார்த்துப் பதில் சொல். அந்தக் கூடையின் பக்கத்தில் என்ன இருக்கிறது பார்.” பக்கத்திலா! ஒரு சின்ன பாத்திரம் வைத்திருக்கிறான்." 'அவ்வளவுதானா தம்பி! அந்தப் பாத்திரத்திற்குள் என்ன இருக்கிறது பார்; நன்றாகக் கவனித்துச் சொல்ல வேண்டும்.’ - பார்த்தேன் அண்ணு. சின்ன சின்ன புழுக்கள் அந்தப் பாத்திரத்திற்குள் இருக்கின்றன. இன்னும் சின்ன சின்ன