பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

10 இறைச்சிகூட இருக்கின்றது. அவைகள் எல்லாம் எதற் கண்ணா?” "பொறுத்திரு தம்பி! ஒவ்வொன்றாகத்தானே சொல்ல வேண்டும். பெரிய பாடமல்லவா உனக்கு இப்போது சொல்லித்தரப் போகிறேன். பெரிய பாடம் என்றவுடன் பயப்படுகிறாயா? பெரிய பாடத்தைச் சின்ன வழியில் எளி தாக விளக்கப்போகின்றேன். சரி! அவன் கையில் குச்சி'சின்ன கோல்-வைத்திருப்பதைப் பார்க்கிறாய் அல்லவா? "ஆம் அண்ணா! அந்தக் குச்சியில் ஒரு நீளமான கயிறு தொங்குவதையும் பார்க்கிறேன்.” "இதோ, பார்! நன்றாக உற்றுக் கவனி. அந்த ஆள் அந்தக் கயிற்றின் முனையைப் பிடிக்கிறான். அந்த முனை யில் என்ன இருக்கிறது? நன்றாகப் பார்!’ பார்த்துவிட்டேன் அண்ணா, முனையில் சின்ன முள் இருக்கிறது; கொக்கி மாதிரி இருக்கிறதே. கூர்மையாகவும் தெரிகிறதே! இன்னும், என்ன செய்கிறான் என்று பார்க் கிறேன், அண்ணா.” 'தம்பி, உனக்கே ஆர்வம் வந்துவிட்டதே! அவன் என்ன செய்கிறான் என்பதை நானும் சொல்லுகிறேன் கேள். அந்த முள்ளைப் பிடித்துக்கொண்டே, சின்ன பாத்தி ரத்தில் இருக்கும் சிறிய இறைச்சி ஒன்றினை எடுத்தான் பார்த்தாயா? எடுத்து, அந்த முள்ளில் மாட்டிவிட்டான் பார். அந்த முள் அதை நன்றாகப் பிடித்துக்கொண்டுவிட் டது. இப்போது என்ன செய்யப்போகிறான் என்று நீயே பார் தம்பி!” குச்சியை நீட்டி அந்த முள்ளைத் தண்ணிருக்குள் விட்டு விட்டானே.” - * - இன்னும் பார்த்துக்கொண்டே இரு, தம்பி! இப்போது தான் நீ வியப்படையக்கூடிய செயல் நடக்கப்போகிறது.