பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

11

குச்சியை நீட்டிப் பிடித்துக்கொண்டே இருக்கிறான், பார். கயிற்றில் கொஞ்சம் உயரத்தில் கட்டி இருக்கும் தக்கை யொன்று தண்ணிருக்குள் மூழ்கும். அதையும் பார்!’ எப்படி யண்ணா அந்தத் தக்கை மூழ்கும்? என்னைக் கேட்காதே தம்பி, பார்த்துக்கொண்டே இரு; தெரியும்.” ஆ1 மூழ்கிவிட்டதே!’ என்ன தம்பி! என்னைப் பார்! ஏன் இப்படி அதிசய மாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறாய். எல்லாம் புதுமை யாக இருக்கிறதா? பேச்சு மூச்சு இல்லாமல் போய்விடுவாய் போல் இருக்கிறதே!’ ஆகா! என்ன அண்ணா! நான் என்றுமே காணாத காட்சியாகத்தான் இருந்துவிட்டது! ஆதலால்தான் அப்ப டியே அதிசயித்து நின்றுவிட்டேன்.” என்ன பார்த்தாய், சொல் பார்ப்போம்.” "அந்த ஆள் நீரின் மேல் மிதந்துகொண்டிருந்த அந்தத் தக்கையைப் பார்த்துக்கொண்டே இருந்தான். நானும் பார்த்துக்கொண்டே இருந்தேன். சிறிது நேரத்திற்குள் அந்தத் தக்கை நீருக்குள் மூழ்கியது. அவ்வளவுதான். 'சடக்’ கென்று குச்சியை அந்த ஆள் மேலே இழுத்தான்.” ஆகா, என்னண்ணா! பிறகு நான் பார்த்த காட்சியை என்னவென்று கூறுவேன். துள்ளிக் குதித்துக்கொண்டே ஒரு பெரிய மீன் அந்தக் கயிற்றின் முனையில் துடித்துக் கொண்டிருந்தது. உடனே அந்த ஆள் அந்த மீனைப் பற்றிப் பிடித்து எடுத்து கூடைக்குள் போட்டு முடிவிட்டான்.” 'இதுதானா தம்பி, உனக்கு வியப்பாகப் போய்விட் டது! சரி, மறுபடியும் அவன் என்ன செய்கிறான், பார்!’