12
I 2 "இதோ பார்த்துவிட்டேனே! அந்த இரும்பினால் செய்த முள் முனையைப் பிடித்தான். அதில், அந்த சின்ன பாத்திரத்தில் இருந்த இறைச்சியைப் பொருத்திவைத் தான். மறுபடியும் அதை நீருக்குள் விட்டு குச்சியைப் பிடித்துக்கொண்டிருக்கிறான். r "ஏன் இப்படிச் செய்கிறான், தெரிகிறதா தம்பி!” "ஏன் அண்ணா தெரியாது! மறுபடியும் மீன்களைப் பிடிக்கத்தான்.” - "பெரிய நீதியையும், உண்மையையும் உனக்கு இப் போது சொல்லட்டுமா? சொல்லுங்களேன் அண்ணா! அத்துடன் குறட்பாவும் சொல்லிக்கொடுங்கள்." குறட்பா சொல்லுவதற்காகத் தானே, தம்பி, இவ்வள வும் உனக்குக் காட்டினேன். சொல்லாமலா இருப்பேன்! சரி, தம்பி! உன்னைச் சில கேள்விகள் கேட்கிறேன், பதில் சொல்லுகிறாயா, தம்பி!’ கேளுங்கள், சொல்லுகிறேன் அண்ணா.” நீரின் மேல் மிதந்த தக்கை ஏன உள்ளே மூழ்கியது தெரியுமா? தெரியவில்லையே அண்ணா!' "நான் சொல்லுகிறேன். கேள், தம்பி! நீருக்குள் அந்தப் பெரிய மீன் வந்து, இரும்பு முள்ளில் இருந்த இறைச்சியைப் பிடித்து சாப்பிட இழுத்ததே, அதனால்தான் அந்தத் தக்கை நீருக்குள் மூழ்கியது. உடனே மீன் வந்துவிட்டது என்று அந்த ஆள் தெரிந்துகொண்டான். உடனே மேலே கயிற்றை இழுத்தான். மீனைப் பிடித்தான்.” தெரிந்துகொண்டேன் அண்ணா! நன்கு புரிந்துகொண் டேன். அந்த மீன் எப்படியண்ணா அகப்பட்டுக்கொண்டது. அதையும் விளக்கிக் கூறினால் எனக்கு நன்றாகப் புரியும்."