உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

I 3

'சொல்லுகிறேன் தம்பி. அந்த இரும்பில்-முள்மாதிரி இருந்ததில் சின்ன இறைச்சியை வைத்திருந்தான் அல்லவா? அந்த இறைச்சிக்குள் அந்த இரும்பு மறைந்திருந் தது. அந்தப் பெரிய மீன் இறைச்சியைச் சாப்பிட நினைத்து அதை விழுங்கியது. அந்த இரும்பு முள் மீனின் வயிற்றுக்குள் நுழைந்தது. முள்ளில் மீன் சிக்கிக்கொண்டது. தப்பித்துக்கொண்டு போக முடியவில்லை. முடியாது. அகப்பட்டுக்கொண்டது. அவன் கூடைக்குள் விழுந்தது.” புரிந்துாெண்டேன் அண்ணா! இன்னும் குறட்பா சொல்லவில்லையே!” "இதோ சொல்லப் போகிறேனே. சூதாட்டத்தைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறாயா, தம்பி!' கேள்விப்பட்டிருக்கிறேனே! குது விரும்பேல் என்று கூட படித்திருக்கிறேன் அண்ணா! ஒரு சினிமாவில்கூட பார்த்தேனே! சில சூதாடிகள் சூது விளையாடினார்கள். சிலர் நிறையதோற்றார்கள். பலர் வெற்றி பெற்றார்கள். பிறகு அவர்களும் தோற்றார்கள். இப்படியே ஆட்டம் முடிந்து அடித்துக்கொண்டு ஓடினார்கள். அதைத் தான் சூதாட்டம் என்று சொன்னார்கள்.” "அந்தச் சூதாட்டம் இருக்கிறதே தம்பி! அதைத்தான் மீன் பிடிப்பவனைக் காட்டி திருவள்ளுவர் நமக்கு அருமை யாக விளக்கம் தருகிறார்!’ அடடா திருவள்ளுவர் நமக்கு எப்படியெல்லாம் நீதி சொல்லுகிறார் அண்ணா! எனக்கு ஒவ்வொன்றாகச் சொல்லுங்கள். குறித்துக் கொள்ளுகின்றேன்.” ஒரு குச்சியை நீட்டி, கயிற்றைத் தொங்கவிட்டிருந் தானே, அதற்குத்தான் துாண்டில்’ என்று பெயர்.: சரியண்ணா, தெரிந்துகொண்டேன்." 'அவன் செய்கிற வேலை சூதாட்டம் மாதிரிதான்! ஏமாற்று வேலைதானே!"