உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

14 "ஆம் அண்ணா, அதுவும் தெரிகிறது’ "அந்தப் பெரிய மீன் சூதாட்டம் விளையாடுகிறவன் மாதிரி. விளங்குகிறதா தம்பி? இன்னும் விளக்கமாகச் சொல்லுகிறேன். கேள் தம்பி. அந்த மீன், அந்த இறைச்சியைத் தின்பதற்கு ஆசைப்பட் டது. அது சின்ன உணவு. ஆசைப்பட்டு அதனிடம் வந்தது. அந்த உணவைப் பிடித்துக்கொண்டது. உடனே அந்த மீனுக்கு மகிழ்ச்சி! என்ன மகிழ்ச்சி! அந்த இறைச்சி கிடைத்துவிட்டது என்று! அந்த இறைச்சிக்குள் இருந்த இரும்பு முள் அதற்குத் தெரியாதே! சின்ன இறைச்சி அந்த மீனின் வயிற்றினுள் போனதும், அந்தப் பெரிய மீன் அந்த ஆளின் கூடைக்குள் அகப்பட்டுவிட்டதே!’ 'நன்றாக விளங்குகிறது அண்ணா! இன்னும் தெளிவு 'படுத்துங்கள்.” 'சூதாடுகிறவன் இருக்கிறானே தம்பி, அவன் அந்த மீன் போன்றவன். எப்படியும் துன்பத்தில் அகப்பட்டு வேதனைப்பட்டு அழிந்தே போவான். சில நேரத்தில் சூதாடுபவனுக்கு வெற்றி கிடைக்கும். அந்த வெற்றியில் கண்ட மகிழ்ச்சியில் பெருமை கொள்ளுவான். அந்தச் சிறிய வெற்றி, பிறகு அவனுடைய நிறைந்த பணத்தையும் வெளி யில் கொண்டுவந்து அவன் இழக்கும்படி செய்துவிடும்.” நன்றாக விளங்குகிறது அண்ணா! அந்த மீன் இறைச்சி யைச் சாப்பிட்டதே. அது சூதாடுகிறவன் பெற்ற வெற்றி போன்றதுதானே.” "ஆமாம் தம்பி! ஆனால் அந்த சூதாட்டத்தின் வேகம், மயக்கம் அதிகரித்துவிட்டதல்லவா? அதனால்தானே அவன் எல்லாப்பொருளையும் இழந்துவிடும் நிலைக்கு ஆளாகிவிடு கின்றான். அதுபோலத்தான் அந்த இறைச்சிக்குள் மறைந் திருந்த இரும்பு முள்ளும் ஆகும். சின்ன இறைச்சிக்கு அந்த மீன் ஆசைப்பட்டுத் தின்றது. ஆனால் அதற்குள் இருந்த முள் அந்தப் பெரிய மீனையே சாகடித்துவிட்டதே."