15
芷5
'சூதாட்டத்தின் ஆபத்து மிகவும் கொடுமையாக இருக் கிறதே அண்ணா!' "அதிலென்ன சந்தேகம் தம்பி! சூதாட்டத்தினை எப் போதும் யாருமே விரும்பக்கூடாது. வெற்றிபெற்றாலும் விரும்பக்கூடாது. வெற்றி வந்தால் அது மிகுந்த ஆபத்தி னையே கொடுக்கும். சூதாட்டத்தில் வெற்றி பெற்றால், அது தூண்டினில் இருந்த இரும்பு முள்ளினை விழுங்கிய மீனின் கதிதான் ஆகும். குறட்பாவினைச் சொல்லுகிறேன். எழுதிக்கொள்: வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றது உம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று- - எழுதிக்கொண்டேன் அண்ணா! ஒரு சின்ன சந்தேகம்’ "உன் சந்தேகம் என்னவென்று எனக்குத் தெரியும் தம்பி! பொன்’ என்றால் என்னவென்று கேட்கின்றாய். அதுதானே? "ஆமாம் அண்ணா. அதுவேதான்.” பொன் என்றால் ஆபரணமாகப் போட்டுக்கொள்ளு கிறார்களே அதற்குப்பெயர். இன்னொரு அர்த்தம் இரும்பு என்பதாகும். இங்கே இரும்பு என்றுதான் பொருள்படும். அந்த மீன் விழுங்கிய இரும்பு முள் என்று புரிந்துகொள்ள வேண்டும். இன்னும் ஏதேனும் கேட்கவேண்டுமா, தம்பி!' ஒன்றுமில்லை அண்ணா. எல்லாம் நன்றாகத் தெளி வாகிவிட்டதே. துரண்டில், பொன், மீன், விழுங்குவது ஆகிய இந்த நான்கும், சூதாட்டம், வெற்றியில் இருக்கும் ஆபத்து, சூதாடுகிறவன், அவன் வெற்றி இவைகளைக் குறித்து அழகாகக் காட்டிவிட்டதே!’ 'தம்பி! நீ பெரிய ஆராய்ச்சிக்காரனாக ஆகிவிட்டாயே! நன்றாகப் பிரித்துக்காட்டி எனக்கே தெளிவு தந்துவிட்டாய். இங்கே இவ்வளவு நேரம் இருந்தது போதும். இனிமேல் கொஞ்ச தூரம் நடந்துகொண்டே போகலாம், வா!' சரி அண்ணா! எனக்கும் நடந்து போகவேண்டும் போல் தோன்றுகிறது. போவோம்.” (செல்கிறார்கள்)