16
3 அடக்கத்தின் பெருமை 'தம்பி! போதுமா, நடந்தது!’ போதும் அண்ணா! நல்ல இடத்தில்தான் தாங்களும் என்னைக் கேட்கின்றீர்கள். இந்த மாதிரியான காட்சியைப் பார்த்துவிட்டு, இந்த இடத்தை விட்டு சீக்கிரம் போக மனம் வராது அண்ணா!' புத்திசாலித்தனமாகப் பேசுகிறாயே! குறள் பாடம் படிக்கிறவனல்லவா நீ! அப்படித்தான் பேசுவாய்! ஆமாம் தம்பி! இந்த இடத்தில் என்ன காட்சி உன்னைக் கவர்ந்து விட்டது!’ நீங்களும் பார்த்துக்கொண்டே கேட்கிறீர்களே அண்ணா! உங்களுக்கா தெரியாது. இதோ நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே இந்த மலைதான் அண்ணா! நகரத் திலே வசிப்பவர்களுக்கு இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்க் கின்ற அரிய வாய்ப்பு எங்கே கிடைக்கப்போகிறது? என்ன தம்பி அப்படிச் சொல்லிவிட்டாய். அவர்களும் இப்படிப்பட்ட காட்சிகளைப் படத்தில் பார்ப்பார்களே!’ படத்தில் பார்ப்பதா காட்சி! அது படக்காட்சி அண்ணா! அதுவா இன்பம்! நாம் இங்கே பார்ப்பது இயற் கைக் காட்சி! இன்பமாக இருந்து நாம் சுவைக்கும் காட்சி யாக இருக்கிறதே!’ எனக்கு நல்ல பதில் சொல்லிவிட்டாய் தம்பி! காட் சியை நன்றாகப் பார்த்து சுவைத்தோம்!” - அதெப்படி அண்ணா புறப்படுவது? குறட்பா ஒன்று தெரிந்துகொள்ளாமல் புறப்படக்கூடாதே! அதற்குத்தானே