உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

17

தங்களுடன் வந்திருக்கிறேன். மலை எவ்வளவு பெரிதாக இருக்கிறது. இவ்வளவு பெரிய காட்சியைப் பார்த்தபிறகு நீங்கள் குறள் சொல்லாமலா போவீர்கள்!" எனக்கே ஆர்வத்தினை அதிகப்படுத்திவிட்டாயே! இந்த மலை மிகவும் பெரிதாகத்தானே இருக்கிறது!’

  • அதிலென்ன சந்தேகம் இருக்கிறது! மலையைவிடப் பெரிது ஒன்றுமே இருக்காதே!’

"அப்படிச் சொல்லிவிடாதே தம்பி! இந்த மலையினை விடப் பெரிதாக ஒன்று இருக்கிறது. அதைத்தான் உனக்குச் சொல்லப்போகிறேன். நான், எனக்குத் தோன்றியதைச் சொல்லுகிறேன் என்று நினைத்துவிடாதே. திருவள்ளுவர் தான் சொல்லுகிறார்!’ 'அண்ணா, அப்படியா ஒன்று இருக்கிறது. அதை உடனே சொல்லுங்கள் அண்ணா! அந்தப் பெரிசு எங்கே இருக்கிறது.” 'தம்பி! அதைப் பார்க்க எங்கேயும் போய் அலைய வேண்டாம். நமக்குள்ளேயேதான் இருக்கின்றது." மக்களுக்கு நல்ல குணங்கள்தான் வேண்டும். நல்ல பெருமையும் புகழும் அடைவதற்குச் சிறந்த குணங்கள்தான் காரணம் என்பது உனக்குத் தெரியுமா தம்பி!! 'நன்றாகத் தெரியும் அண்ணா! நேற்றுகூட ஒரு குறட் பாவில் விளக்கிச் சொன்னீர்களே! குணம் என்னும் குன்று' என்றுகூட படித்தேனே! நல்ல குணங்கள்தான் நல்ல மனிதன் என்பதற்கு அடையாளம். "அந்தக் குணங்களில் ஒரு குணம் இருக்கின்றது. அந்தக் குணத்தைப் பெற்றவனுடைய பெருமை இருக்கிறதே அது மலையினைவிடப் பெரிது என்று வள்ளுவர் கூறுகிறார். அவ னுடைய உயர்ச்சி, பார்ப்பதற்குச் சிறிதுபோல் தோன் னாலும், மலையினைவிட உயரமானதாகும்.' . 2