உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

18 "அது எந்தக் குணம் அண்ணா? 'அதுதான் அடக்கம் என்கிற பண்பாகும், அடக்க முடையவனுடைய தோற்றம் மலையினைவிட உயரமான தாகும்.” ஏன் அண்ணா அவ்வளவு சிறப்பு. அந்தக் குணத்திற்கு! மலையைச் சொல்வி, அதையும்விட சிறப்பாகக் கூறிவிட் டிர்கள்.” 'தம்பி! அப்படித்தான் கேட்கவேண்டும். நீ கேட்பது போல, பல கேள்விகள் கேட்டால்தான் ஒவ்வொரு குறட்பா வின் உண்மையினையும் புரிந்துகொள்ளமுடியும். இந்த மலை ஆடாமல், அசையாமல் அப்படியே இருக்கிறதல் லவா? எவ்வளவோ பொருள்களையும் தாங்கிக்கொண்டு இருக்கின்றதல்லவா? வெயில், மழைபோல எல்லாவற்றிற் கும் பேசாமல் அப்படியே இருக்கின்றதல்லவா? "ஆம், அண்ணா! நீங்கள் சொல்லுவது உண்மைதான். எனக்கு என்னென்னமோ எண்ணமெல்லாம் தோன்று கிறதே! நீங்கள் சொல்லுவதைப்போல, இந்த மலையைப் பற்றி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம் போலி ருக்கின்றதே!’ நிறைய சொல்லலாம் தம்பி! நான் சுருக்கமாகச் சொன்னேன். அதுமாதிரித்தான் மக்களுக்கு இருக்கும் குணங்களில் அடக்கம் என்கிற குணம் மிகவும் அருமையான குணமாகும்.” அந்த அருமையான குணத்தைப் பற்றி இன்னும் விளக்கமாகக் கேட்க ஆசைப்படுகிறேன் அண்ணா!' 'உன் ஆசையை நிறைவேற்றுவேன் தம்பி! அடக்கம் என்கிற குணம் இல்லாதவர்கள் மக்களாகவே எண்ணப்பட மாட்டாகள். எங்கும் அலைந்து திரிவார்கள். எல்லோ ராலும் வெறுக்கப்படுவார்கள். அடக்கமுள்ளவர்களை