உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

19

எல்லோரும் மதிப்பார்கள். அடக்கமுள்ளவர்கள் நல்ல வழி களிலிருந்து மாறவேமாட்டார்கள். மலையைப் போல் நிலைத்து நின்று அசையாமல் உறுதியாக இருப்பார்கள். தங்களைத் தம்பட்டம் அடித்துக்கொள்ளமாட்டார்கள் . கல்வி அறிவு பெற்றிருந்தும், பல பொருள்களைக் கொண் டிருந்தும் அசையாமல் இருக்கின்ற மலையைப்போல, அடக்கம் ஒடுக்கமாகவே இருப்பார்கள். இன்னும்...” போதும் அண்ணா போதும் இந்தக் குணத்தினைப் பற்றி இன்று முழுதுமே சொல்லிக் கொண்டிருக்கலாம் போல் இருக்கின்றதே! சரி அண்ணா! குறட்பாவினைச் சொல்லுங்கள் எழுதிக்கொள்ளுகின்றேன்.' எழுதிக்கொள், தம்பி, இதோ சொல்லுகிறேன். நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் ம்ாணப் பெரிது. என்ன தம்பி! உன் முகத்தில் புதிய மலர்ச்சி தோன்று கிறதே! என்ன சொல்!” இந்தக் குறட்பா மிக எளிமையான சொற்களாய் இருக்கின்றதே! படிக்கும்போதே மனப்பாடம் ஆகிவிடு கிறது, அண்ணா!' . - அதை நினைத்து மகிழ்ச்சியா தம்பி! ஒன்று சொல்லு கிறேன் கேள் தம்பி. குறட்பாக்களில் பல குறட்பாக்கள் இப்படித்தான் எளிய சொற்களால் அமைக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட எல்லா குறட்பாக்களுமே கூட அப்படித்தான் தம்பி. உன்னைப் போல புத்திசாவிப் பிள்ளைகள் சீக்கிர மாகக் குறட்பாடம் கற்றுக்கொள்ளலாமே!’ 'அண்ணா, இக்குறட்பாவில் எல்லாம் விளங்கிவிட்டது. இருந்தாலும் மலையினைவிட அடக்கமுடையவன் உயர்ச்சி மிகப் பெரிது என்பதை இன்னும் கொஞ்சம் விளக்கிக் கேட்க ஆசையாக இருக்கின்றது.” r