பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

20 அந்தக் கருத்து சாதாரணமானதுதான் தம்பி! அதா வது எளிதாக விளங்கிக் கொள்ளலாமே. மலை மிகவும் பெரிதுதான். ஆனால் அது அதைப் பார்ப்பவர்களுக்குத் தான் தெரியும். மலையின் அருகில் நிற்பவர்களுக்குத்தான் தெரியும், வெளியூர்களில் இருப்பவர்களுக்கும் வெளி நாடு களில் இருப்பவர்களுக்கும் அந்த மலை தெரியாது. ஆனால் அடக்கமுடன் பெருமையுள்ளவனுடைய சிறப்பு அவனைப் பார்க்காதவர்களுக்குக்கூட தெரியுமே! அப்படிப்பட்டவனு டைய புகழ் உலகமெங்கும் பரவி இருக்குமாம்! ஆதலால் தான், மலையினைவிடப் பெரிது-அவனுடைய தோற்றம்,’ இப்போது எவ்வளவோ, உண்மைகள் விளங்கி விட்ட தண்ணா!' தம்பி நீ பெரியவனாகி, இன்னும் எவ்வளவோ உண்மைகள் தெரிந்து கொள்ளப் போகிறாய்!" "ஏன் அண்ணா, இத்துடன் நிறுத்திவிடப்போகிறீர் களோ ! இன்றைய பொழுதிற்குள் இன்னும் நிறைய சொல்லமாட்டீர்களா அண்ணா?” - 'இல்லை தம்பி! உனக்குச் சொல்லத்தானே அழைத்து வந்தேன். நிறைய படிப்போம். எவ்வளவு கற்றாலும் குறள் இன்பம் வளர்ந்து கொண்டுதானே போகும். மலை யோரமாகப் போய் பார்க்கலாம் வா!' "நானும் அப்படித்தான் அண்ணா நினைத்தேன். நான் பார்க்காத புதியவைகளை எல்லாம் இங்குப் பார்க்க எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருக்கின்றது.”