21
4
ஊக்கமும் ஒழுக்கமும் "அதோ கும்பல் கும்பலாகப் போய்க்கொண்டிருப் பதைப் பார்க்கிறாயா, தம்பி! "ஆம், அண்ணா. அவைகளை ஒட்டிக் கொண்டு ஒருவன் போகின்றான். அவைகள் எல்லாம் செம்மறி ஆடுகள். எனக்குத் தெரியும் அண்ணா: நான் எத்தனையோ இடங் களில் பார்த்திருக்கிறேன்.” "ஆடுகளை நீ பார்த்திருக்க மாட்டாய் என்று நான் சொல்லவில்லை தம்பி, வா, அங்கே அருகில் போய்ப் பார்ப்போம். அவைகள் என்ன செய்கின்றனவென்று பார்ப்போமா தம்பி.” - அவன்கூட, எல்லா ஆடுகளையும் ஓர் இடத்தில் நிறுத்தி ஒய்வெடுக்கிறான் போல் இருக்கின்றது. நாம் வந்த தும் பார்ப்பதற்கு சரியாய்ப் போய்விட்டது.” "ஆடுகளைப் பார்க்க உன்னைக் கூப்பிட்டுக்கொண்டு வரவில்லை. அதோ பார்! உடனே நன்றாகப் பார்! அந்த இரண்டு ஆட்டுக் கடாக்களும் என்ன செய்கின்றன! அதோ அந்தக் கடைசியில் பார்!’ - 'நன்றாகத் தெரிகிறது அண்ணா! அந்தச் சண்டை நன்றாக இருக்கிறதே! வாங்களண்ணா! அருகாமையில் போய்ப் பார்ப்போம்.” 'தம்பி, அருகில் போகக் கூடாது. கடாக்கள் மூர்க்கத் தனமானவை. இங்கே இருந்தாலே நன்றாகத் தெரிய வில்லையா?” -