பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

22 'நன்றாகத் தெரிகிறதே அண்ணா!' தம்பி, இது வெறும் வேடிக்கை அல்ல! வேடிக்கைக் காக உன்னைப் பார்க்கச் சொல்லவில்லை! அவைகள் சண்டை போடும் விதத்தைக் கவனிக்கிறாயா? கவனிக்கிறேன். ஒன்றோடு ஒன்று பலமாக மோது கிறதே! பயமாகக்கூட இருக்கிறது. ஆவேசமாகவும், மோது வதைப் பாருங்கள் அண்ணா? தம்பி! ஒன்றோடொன்று நெற்றியோடு நெற்றி மோதுகிறதே! அதைத் தானா பார்க்கிறாய். அதைவிட முக்கியமான நிகழ்ச்சியொன்று தெரிகிறதா?” தெரிகிறதே! மோதுவதற்கு முன் கால்களைத் துாக்கி, மேலே கிளப்பி, பிறகு பலமாக மோதுகின்றன. அதைத் தானே அண்ணா சொல்கிறீர்கள்? அதுவல்ல தம்பி, நான் சொல்லுவது! மோதிவிட்டு அதற்குப் பிதகு என்ன செய்கின்றன என்று பார்!’ ஆம் அண்ணா, பின்னாலேயே போகின்றன. அப்ப டிப் போவது பார்க்க மிகவும் நுட்பமாகக் கூட இருக்கிறதே! ஏதோ, மனதில் வைத்துப் போவதுபோல தோன்றுகிறதே!’ இப்போது நன்றாகப் பார்த்துக் கொண்டாய் தம்பி’ அதைத் தான் உன்னைக் கவனித்துப் பார்க்கச் சொன்னேன். அந்தக் கடாக்கள் போவது பயந்து போவது என்றுகூட சிலர் நினைத்துவிடலாம் அல்லவா? "ஆமாம் அண்ணா! பின்னாலேயே போவதால், பயந்து ஒடுங்கிப் போகிறது அந்த ஆட்டுக் கடா என்று நினைப்பதற் கும் இடமிருக்கிறது அண்ணா? 'தம்பி! வரவர நீ தெளிந்து, துணிந்து சிறப்பாகப் பேசுகிறாயே! உன்னுடன் பேசப்பேச எனக்குக்கூட மகிழ்ச்சி அதிகரிக்கிறது. அந்த ஆட்டுக் கடாக்கள் பின்புறமாகக் கால் வாங்கிப் போவது எதற்கு என்று உனக்குப் புரியாமலா இருக்கும், தம்பி!'