உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

2 3

"ஏன் அண்ணா புரியவில்லை! நேருக்கு நேரே நன்றா கத் தெரிகின்றதே. பின்னால் கால் வாங்கிப் போனால் தான் பிறகு மிகவும் பலமாகத் தாக்க முடியும் என்பது அந்த ஆட்டுக்கடாக்களுக்கு நன்றாகத் தெரியும் போல் இருக்கின் றதே! தெரியாமலா ஒவ்வொரு தடவையும் அப்படிப் பின் வாங்கிப் போகும்.” 'தம்பி, போதுமா ஆட்டுச் சண்டையைப் பார்த்தது.” இருங்கள் அண்ணா, இன்னும் கொஞ்ச நேரம் அந்தச் சண்டையைப் பார்த்துவிட்டு வருகிறேன்.” "ஒரே மாதிரியான சண்டைதான் தம்பி! இங்கேயே இவ்வளவு நேரம் நாம் கழிக்கலாமா? குறள் தெரிந்து கொள்ள வேண்டாமா, நீ.” ஆ! இந்தச் சண்டையில் கூட குறள் சொல்லப் போகி lர்களா அண்ணா! நான் என்னை விளையாட்டுப பார்க்க இங்கே அழைத்து வந்தீர்கள் என்று நேரம் கழித்துவிட் டேன். மன்னித்து விடுங்கள் அண்ணா.” அதற்கென்ன தம்பி! அப்படியும் கொஞ்ச நேரம் செலவு செய்வதும் பொழுதுபோக்குத் தான், ஏன் தம்பி! அரசர்களைப்பற்றி நீ படித்திருக்கிறாயா? "படித்திருக்கிறேனே. சரித்திரம் படித்திருக்கிறேன். அரசர்களைப் பற்றியும், நாட்டுக்கு நாடு போர் செய்ததைப் பற்றியும் இன்னும் எவ்வளவோ படித்தும் கேட்டும் இருக் கிறேன் அண்ணா!' போர் செய்வது அரசர்களுக்குரிய முக்கிய தொழில் என்பதுதானே, தம்பி.” தேவையானபோது பகைவர்களை அரசர்கள் படை கொண்டு தாக்குவார்கள் என்று படித்திருக்கிறேன்.”